KADHAL KAVITHAIGAL

 காதல் கவிதைகள் 



Movie: Gopura vasalile 

Singers: S.P.Balasubramaniam,  K.S.Chithra 

Music director: Ilayaraja 


ஆண்: காதல் கவிதைகள் படித்திடும் நேரம்..இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்.. புது மோகம்..
இதயம் இடம் மாறும்..
இளமை பரிமாறும்..
அமுதும் வழிந்தோடும்..
அழகில் கலந்தாட..

ஆ&பெ:இதம் தரும் காதல்

பெண்: கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்..
இதயம் இடம் மாறும்..
இளமை பரிமாறும்..
அமுதும் வழிந்தோடும்..
அழகில் கலந்தாட..

ஆ&பெ:இதம் தரும் காதல்

ஆண்: கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்..

ஆண்: கை வீசிடும் தென்றல்..
கண் மூடிடும் மின்னல்..
இது கனியோ கவியோ அமுதோ சிலை அழகோ..

பெண்: பண் பாடிடும் சந்தம்..
உன் நாவினில் சிந்தும்..
அது மழையோ புனலோ நதியோ கலை அழகோ..

ஆண்: மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி..
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்து கொண்டதடி..

பெண்: இது தொடரும் வளரும் மலரும்..
இனி கனவும் நினைவும் உனையே..

ஆண்: தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. இதழோரம்..

பெண்: இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்.. புது மோகம்..

ஆண்: இதயம் இடம் மாறும்..
இளமை பரிமாறும்..

பெண்: அமுதும் வழிந்தோடும்..
அழகில் கலந்தாட..

ஆண்:இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் 

பெண்: இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ..

ஆண்: புது மோகம்..

பெண்: பூமாலைகள் கொஞ்சும்..
பாமாலைகள் கெஞ்சும்..
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை..

ஆண்: தோள் சேர்ந்திடும் கங்கை..
செவ்வாழையின் தங்கை..
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை..

பெண்: கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவா..
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ..

ஆண்: இனி வருவாய் தருவாய் மலர்வாய்..
என்னை உயிராய் உறவாய் தொடர்வாய்..

பெண்:தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்..இதழோரம்..

ஆண்:இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்..புது மோகம்..

பெண்: இதயம் இடம் மாறும்..
இளமை பரிமாறும்..

ஆண்: அமுதும் வழிந்தோடும்..
அழகில் கலந்தாட..

பெண்:இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் 

ஆண்: இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ..

பெண்: புது மோகம்..




......................




Songs lyrics from Gopura vasalile movie: