KANNI PENGAL NENJUKKUL-KADHAL MANNAN

கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்



Movie: Kadhal mannan

Singers: Ada Ali azad,  Febi mani

Music director: Bharadwaj 


பெண்: கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்

ஆண்: கையெழுத்து போட்டவன்..

பெண்: பத்து பேர்கள் மத்தியில்

ஆண்: பளிச்சென்று உள்ளவன்..

பெண்: அழுக்கு சட்டை போட்டாலும் 

ஆண்: அழகாய் தோன்றும் ஆணழகன்..

பெண்: பெண்ணின் பின்னால் சுற்றாமல் 

ஆண்: பெண்ணே சுற்றும் பேரழகன்..
எவனோ..ஓ..ஓ.ஓ..

பெண்: கல்வி இல்லா கன்னியரும் கடிதம் எழுத செய்கிறவன்..
காதல் அரித்த பெண் மனதில்  கல்லை எறிந்து போகிறவன் எவனோ..

ஆண்: ஹே ஹே அவனே காதல் மன்னன்..
காதல் மன்னன்..காதல் மன்னன்..காதல் மன்னன்..

பெண்: சுவர் எல்லாம் பெண்கள் ஒட்டி தொட்டு பார்க்கும் வயசு ..
உறவாடும் கனவை கண்டு உச்சி கொட்டும் உதடு..
ரதி தேவி பேத்தி போல மனைவி தேடும் மனசு..
எதிர்வீட்டை அத்தை வீடாய் எண்ணி பார்க்கும் வயசு..
சின்ன பெண்கள் இடையே சிக்கி கொண்ட போதும் 
அலைகள் முட்டும் பாறை போல அசையாதுள்ள வீரன் எவனோ..

ஆண்: ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் ..
காதல் மன்னன்..

பெண்: முன்னாள் மலர்கள் என்று ஒருபோதும் இல்லை..
முன்னாள் இளமை ஒன்று வர போவதும் இல்லை..
நம் நாட்டில் மக்கள் தொகை தொண்ணூற்றாரு கோடி..
அழகான பெண்கள் மட்டும் ஐம்பத்தாரு கோடி..
இதில் பெண்கள் வந்து கண்கள் வைப்பவன் யாரோ.. 
அவன் பெயரை கேளுங்கள்..

ஆண்: ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன்..
காதல் மன்னன்..

பெண்: மதமென்ன ஜாதியென்ன..

ஆண்: மறந்து போனோம் நாங்கள்..

பெண்: பல ஊரு பறவைக்கெல்லாம்..

ஆண்: இது தான் வேடந்தாங்கல்..

பெண்: உணவோடு பசியை கூட..

ஆண்: பகிர்ந்து கொள்வோம் நாங்கள்..

பெண்: கிழமை தேதி பார்ப்பதும் இல்லை

ஆண்: நகரும் எங்கள் நாட்கள்

எதுவும் இல்லை கையில்
எல்லாம் உள்ளது நெஞ்சில்
நாளை எந்தன் காலம் என்று பாடல் பாடும் காளை எவனோ..

ஆண்: ஹே ஹே ஹே..அவனே காதல் மன்னன்..
காதல் மன்னன்..
 
பெண்: கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்..
பெண்ணின் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்..

ஆண்: ஹே ஹே அவனே காதல் மன்னன்..
காதல் மன்னன்..காதல் மன்னன்..காதல் மன்னன்..