AAGAYAM ITHANAI NAAL
ஆகாயம் இத்தனை நாள்
Movie: unakum enakum
Singer: SPB
Music director: Devi sri prasad
ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல் தூணாக தாங்குவது காதல்தான்
ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க அழகான காரணமே காதல்தான்
பஞ்சபூதங்கள் யாவும் காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின் கிழமை
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும்
மரம் ஏற ஏணியை தந்தால் மலையில் ஏறி கொடி ஏற்றும்
குண்டூசி கையில் தந்தால் கிணறே தோண்டிவிடும்
வெறும் கல்லை வைர கல்லாய் காதல் பார்வை மாற்றிவிடும்
வெந்நீரில் விட்டால் கூட காதல் மீன் நீந்தும்
கஷ்டம்..காதலுக்கு இஷ்டம்.... வெற்றி பெற வேண்டும் என்றால் காதல் எதையும் தாங்கிடுமே...
முட்டும்..கதவுகளை தட்டும்.. சறுக்கி விடும் பாறை எல்லாம் வெற்றி படியாய் மாற்றிடுமே....
அண்ணாந்து பார்க்காமல் விண்மீனை வீழ்த்திவிடும்..
துணை யாரும் இல்லாமல் ஜெயித்திடுமே..
இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே..
இருமனம் விரும்பி துணிந்து நுழையுமே..
பயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே...
வேரோடு வேர்வை ஊற்றி காதல் என்றும் வென்றுவிடும்..
வெறியோடு ஓடும் போது தடையை உடைத்துவிடும்..
கடல் நீரை தேக்கும்போது உப்பாய் தானே மாறிவிடும்..
கண்ணீரை தேக்கும் காதல் முத்தாய் மாறிவிடும்..
காதல்.. கேட்டு கொண்டு வருமா..
தோட்டத்துக்குள் பறவை வந்தால் வேலி என்ன தடுத்திடுமா..
காதல்.. காட்டுச்செடி போலே..
கட்டளைகள் போடும்போதும் பூக்கள் பூக்க மறுத்திடுமா..
புலி வாழும் குகை உள்ளே கிளி வாழும் வீரத்தை மனதோடு தந்திடுமே காதல்தான்..
இது போகும் வழியோ வெற்று பாதை..
திரும்பும் வழியோ வெற்றி பாதை..
விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணமிது..
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது..
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது..
மலையேறும் எறும்பின் கால்கள் வெயிலை மிதித்து உடையாது..
மனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது...
...................
Song lyrics from unakum enakum movie:-
