PENNE ENNAI KODU
பெண்ணே என்னை கொடு
Movie: Yaaradi nee mohini
Singers: Karthik
Music director: Yuvan Shankar raja
பெண்ணே என்னை கொடு..
போதும் விட்டு விடு..
கூட்டை விட்டு நெஞ்சம் வந்து ஆட்டம் போடுதே
விட்டால் தொட்டுவிடும்..
தொட்டால் விட்டுவிடும்..
கண்ணாமூச்சி காதல் இங்கே வெட்டித்தள்ளுதே..
போதும் போதும்.. காதல் போதும்..
காதல் தந்த.. காயம் போதும்..
போதும் போதும்..காதல் போதும்..
காதல் தந்த..காயம் போதும்..
கடலேறி போனேன்.. காற்றாய் வந்தாயே..
எந்தன் உயிர் தொட்டு உள்ளே நின்றாயே..
மடி மீது சாய்ந்தேன்.. மஞ்சம் என்றாயே..
இன்று விழியோரம் கண்ணீர் தந்தாயே..
எத்தனை வலிகள் உள்ளதடி
காதலில் பெண்ணே என்னை பார்
அத்தனை வலியும் சொல்லுதடி
உன் பெயர் மட்டும் கேட்டுபார்
வேதனை வேண்டும் என்றாலே
பெண்களைக் காதல் செய்துபார்
சாவிலும் கொஞ்சம் துன்பம் தான்..
காதலில் மொத்தம் செத்து பார்
போதும் போதும்.. காதல் போதும்..
காதல் தந்த..காயம் போதும்..
தனியாக வாழும் ஆண்கள் யாருமே
இந்த மண் மேலே பாவம் தான் அம்மா
அலைமேலே தோன்றும் கோலம் போலவே
காதல் சில நேர தோற்றம் தான் அம்மா
கெட்ட பின் ஞானம் தோன்றியது
பெண்களால் இன்பம் இல்லையடி
சுட்டபின் களிமண் இப்போது
கல்லென மாறி போனதடி
ஆதலால் காதல் செய்யாதே
பாவியாய் பூமியில் அலையாதே
ஆவியை அவளிடம் வைக்காதே
காவியை கட்டி திரியாதே..
போதும் போதும்.. காதல் போதும்..
காதல் தந்த.. காயம் போதும்..
....................
Songs lyrics from Yaaradi nee mohini movie:
