PRIYASAKHI
பிரியசகி
Movie: Gopura vasalile
Singers: Mano, S.Janaki
Music director: Ilayaraja
ஆண்: பிரியசகி.. பிரியசகி..
வருவேன் வாசல் தேடி..
வருத்தம் ஏனடி..
தருவேன் பாடல் கோடி..
தனிமை ஏதடி..
இளைய தேகம் ஓ.. இணைய வேண்டும்..
பெண்: பிரியசகி.. நான் பிரியசகி..
பிரியசகி..உன் பிரியசகி..
வருவாய் வாசல் தேடி..
வருந்தும் பூங்கொடி..
தருவாய் பாடல் கோடி..
தவிக்கும் பைங்கிளி..
இளைய தேகம் ஓ.. இணைய வேண்டும்..
இனிய ராகம் ஓ.. புனைய வேண்டும்..
ஆண்: பிரியசகி.. ஓ பிரியசகி..
பெண்: காதலன் வீரமிகு ஆண்மகன்.. ஆண்மகன்..
காவலை மீறி வரும் நாயகன்.. நாயகன்..
காதலன் வீரமிகு ஆண்மகன்.. ஆண்மகன்..
காவலை மீறி வரும் நாயகன்.. நாயகன்..
ஆண்: பார்வை ஒன்று காட்டு கண்மணி..
பூமி தன்னை கையில் ஏந்துவேன்..
வார்த்தை ஒன்று பேசு பொன்மணி..
மேகம் போல வானில் நீந்துவேன்..
பெண்: வானமும் வையமும் வாழ்த்துமே வா..
ஆண்: பிரியசகி.. ஓ பிரியசகி..
பிரியசகி ஓ பிரியசகி..
பெண்: கூண்டிலே காதல் குயில் வாடுது.. வாடுது..
கொண்டுபோ கூவி உனைத் தேடுது.. தேடுது..
கூண்டிலே காதல் குயில் வாடுது..வாடுது..
கொண்டுபோ கூவி உனைத் தேடுது.. தேடுது..
ஆண்: வெண்ணிலாவை சிறையில் வைப்பதா..
வானம் என்ன வெளியில் நிற்பதா..
வீரமான நெஞ்சம் இல்லையா..
நெஞ்சில் இந்த வஞ்சி இல்லையா..
பெண்: நீ வரும் பாதையை பார்க்கிறேன் வா..
பெண்: பிரியசகி நான் பிரியசகி..
பிரியசகி..உன் பிரியசகி..
ஆண்:வருவேன் வாசல் தேடி..
வருத்தம் ஏனடி..
தருவேன் பாடல் கோடி..
தனிமை ஏதடி..
பெண்: இளைய தேகம் ஓ.. இணைய வேண்டும்..
ஆண்: இனிய ராகம் ஓ.. புனைய வேண்டும்..
பெண்: பிரியசகி.. நான் பிரியசகி..
ஆண்: பிரியசகி.. ஓ பிரியசகி..
......................
Songs lyrics from Gopura vasalile movie:
