VAANE VAANE

 வானே வானே


Movie: Viswasam

Singers: Hariharan, Shreyaghoshal 

Music director: D.Imman 


மாங்கல்யம் தந்துநானேனா மம ஜீவன ஹேத்துனா..
கண்டே பத்நாமி சுபகே துவம் ஜீவன ஷரதாம் ஷதம்


பெண்: வானே......வானே... வானே..நான் உன் மேகம் தானே....
வானே.....வானே.... வானே..நான் உன் மேகம் தானே...
என் அருகிலே... கண் அருகிலே... நீ வேண்டுமே....
மண்ணடியிலும்... உன் அருகிலே... நான் வேண்டுமே...
சொல்ல முடியாத காதலும்...
சொல்லிலடங்காத நேசமும்..
எண்ண முடியாத ஆசையும்.. 
உன்னிடத்தில் தோன்றுதே....

ஆண்:  நீதானே..பொஞ்சாதி...
நானே உன்..சரி பாதி......
நீதானே..பொஞ்சாதி.....
நானே உன்..சரி பாதி........

பெண்: வானே......வானே... வானே..நான் உன் மேகம் தானே....
                                                     
ஆண்:  இனியவளே..உனது இரு விழி முன்.. 
பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை..
எனது நிலை..
விலக விருப்பம் இல்லையே...பூவே...

பெண்: அதிசயனே...பிறந்து பல வருடம் அறிந்தவை மறந்தது..
எனது நினைவில் இன்று..
உனது முகம்..
தவிர எதுவும் இல்லையே...அன்பே...

ஆண்:  வேறாரும் வாழாத பெருவாழ்விது..
நினைத்தாலே மனமெங்கும் மழை தூவுது..

பெண்:   மழலையின் வாசம் போதுமே...
தரையினில் வானம் மோதுமே...
ஒரு கணமே..உனை பிரிந்தால்.. 
உயிர் மலர் காய்ந்து போகுமே..

ஆண்:  நீதானே...பொஞ்சாதி...
நானே உன்...சரி பாதி...
நீதானே...பொஞ்சாதி...
நானே உன்...சரி பாதி...

பெண்: வானே......வானே... வானே..நான் உன் மேகம் தானே....

ஆண்: என் அருகிலே... கண் அருகிலே... நீ வேண்டுமே....

பெண்: மண்ணடியிலும்... உன் அருகிலே... நான் வேண்டுமே...

ஆண்: சொல்ல முடியாத காதலும்...
சொல்லிலடங்காத நேசமும்..

பெண்: எண்ண முடியாத ஆசையும்.. 
உன்னிடத்தில் தோன்றுதே....

ஆண்:  நீதானே...பொஞ்சாதி...
நானே உன்...சரி பாதி...
நீதானே...பொஞ்சாதி...
நானே உன்...சரி பாதி...

பெண்: வானே....

                                                     



......................






Songs lyrics from Viswasam movie:-
             

Top viewed posts of the week