THIRAKADHA KAATUKULLE

 திறக்காத காட்டுக்குள்ளே

Movie: En swaasa kaatre

Singers: Unni krishnan, K.S.Chithra 

Music director: A.R.Rahman 

ஆண்: திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்..
பறந்தோடும் மானை போல தொலைந்தோடி போனது எங்கள் நாணம்..

பெண்: பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி..
ஓடி வந்து முத்தம் வாங்கி செல்..
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றை கிளியே..
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்..

ஆண்: அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்..
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்..
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்..
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்..

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்..
பறந்தோடும் மானை போல தொலைந்தோடி போனது எங்கள் நாணம்..

பெண்: காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ..
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ..
அது தன்னை சொல்லுதோ..
இல்லை உன்னை சொல்லுதோ..
அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது 
அதோ அதோ அதோ அதோ அங்கே 
ஐயையோ வானவில் இல்லை வண்ண சிறகுகளோ 
அவை வண்ண சிறகுகளோ..
வானவில் பறக்கின்றதோ..

ஆண்: அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது..
புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது..
மேகம் போல் காட்டை நேசி..
மீண்டும் நாம் ஆதிவாசி..
உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் காதல்  யோசி..

ஆண்: திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்..
பறந்தோடும் மானை போல தொலைந்தோடி போனது எங்கள் நாணம்..

பெண்: பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி..
ஓடி வந்து முத்தம் வாங்கி செல்..
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றை கிளியே..
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்..

ஆண்: அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்..
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்..
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்..

ஆ&பெ: பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்..

பெண்: கை தட்டு தட்டி தட்டி பூவை எழுப்பு.. 
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு..
அட என்ன நினைப்பு அதை சொல்லி அனுப்பு..
என் காலடியில் சில வீடுகள் நகருது 
இதோ இதோ இதோ இதோ இங்கே 
ஆஆஆ..வீடுகள் இல்லை நத்தை கூடுகளோ 
அவை நத்தை கூடுகளோ..
வீடுகள் இடம் மாறுமோ..

ஆண்: புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது..
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது.. 
நாட்டுக்கு பூட்டு போடு.. 
காட்டுக்குள் ஓடியாடு..
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு..

ஆ&பெ: திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்..