THEENDAI MEI THEENDAI
தீண்டாய் மெய் தீண்டாய்
Movie: En swaasa kaatre
Singers: S.P.Balasubramaniam, K.S.Chithra
Music director: A.R.Rahman

பெண்: கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணிஈயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே..
தீண்டாய் மெய் தீண்டாய்..
தாண்டாய் படி தாண்டாய்..
தீண்டாய் மெய் தீண்டாய்..
தாண்டாய் படி தாண்டாய்..
தீண்டாய் மெய் தீண்டாய்..
தாண்டாய் படி தாண்டாய்..
தீண்டாய் மெய் தீண்டாய்..
தாண்டாய் படி தாண்டாய்..
ஒரு விரல் வந்து என்னை தீண்டியதே..
என் நரம்போடு வீணை மீட்டியதே..
மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே..
ஆண்: தீண்டாய் மெய் தீண்டாய்..
தாண்டாய் படி தாண்டாய்..
ஒரு விரல் வந்து உன்னை தீண்டியதோ..
உன் நரம்போடு வீணை மீட்டியதோ..
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பை தொடுத்திட்டதோ..
வானில் பிறந்த அமுதன்றோ..
பாலை விளைந்த மழையன்றோ..
முல்லை வகுளம் குருக்கத்தி..
தொல்லையின் இடைந்த உடல் அன்றோ..
தீண்டாய் மெய் தீண்டாய்..
பெண்: விழியோடும் தீண்டல் உண்டு..
விரலோடும் தீண்டல் உண்டு..
இரண்டோடும் பேதம் உள்ளது..
ஆண்: விழி தீண்டல் உயிர் கிள்ளும்..
விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்..
அதுதானே நீ சொல்வது..
பெண்: நதியோர பூவின் மேலே ஜதி பாடும் சாரல் போலே என்னில் இன்ப துன்பம் செய்குவதோ..
ஆண்: ஒரு கன்னம் தந்தேன் முன்னே..
மறு கன்னம் தந்தாய் பெண்ணே..
இயேசுநாதர் காற்று வந்து வீசியதோ..
பெண்: உறவின் உயிரே உயிரே என்னை பெண்ணாய் செய்க..
ஆண்: அழகே அழகே உன் ஆசை வெல்க..
பெண்: தீண்டாய் மெய் தீண்டாய்..
தாண்டாய் படி தாண்டாய்..
ஒரு விரல் வந்து என்னை தீண்டியதே..
என் நரம்போடு வீணை மீட்டியதே..
மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே..
ஆண்: கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல உடலோடு ஒட்டி கொள்ளவோ..
பெண்: உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல உன்னோடு கட்டிக்கொள்ளவோ..
ஆண்: உனை தேடி மண்ணில் வந்தேன்..
எனை தேடி நீயும் வந்தாய்..
உன்னை நானும் என்னை நீயும் கண்டு கொண்டோம்..
பெண்: பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும் போது
பூமி வாழ புதிய காதல் கொண்டு வந்தோம்..
ஆண்: பனியோ பனியின் துளியோ உன் இதழ் மேல் என்ன..
பெண்: பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன..
ஆண்: தீண்டாய்..
பெண்: தீண்டாய்..
ஆண்: மெய் தீண்டாய்..
பெண்: மெய் தீண்டாய்..
ஆண்: தாண்டாய்..
பெண்: தாண்டாய்..
ஆண்: படி தாண்டாய்..
பெண்: படி தாண்டாய்..
ஆண்: ஒரு விரல் வந்து உன்னை தீண்டியதோ..
பெண்: ஒரு விரல் வந்து என்னை தீண்டியதே..
ஆண்: உன் நரம்போடு வீணை மீட்டியதே..
பெண்: என் நரம்போடு வீணை மீட்டியதே..
ஆண்: உன் உயிர்க்குள்ளே..
பெண்: மனம் அவன்தானா
ஆண்: காதல் அம்பை தொடுத்திட்டதோ..
பெண்: இவன் என்று திடுக்கிட்டதே ..
தீண்டாய் மெய் தீண்டாய்..
தாண்டாய் படி தாண்டாய்..
தீண்டாய் மெய் தீண்டாய்..
தாண்டாய் படி தாண்டாய்..
தீண்டாய் மெய் தீண்டாய்..
தாண்டாய் படி தாண்டாய்..படி தாண்டாய்..படி தாண்டாய்.. படி தாண்டாய்..
........................
Songs lyrics from En swasa kaatre movie: