CHINNA CHINNA MAZHAI THULIGAL

 சின்ன சின்ன மழைத்துளிகள்

Movie: En swaasa kaatre

Singers: M.G.Sreekumar, K.S.Chithra 

Music director: A.R.Rahman 

கண் கண் கண் கண் ஒரு துளி விழுது ஒரு துளி விழுது..
கண் கண் கண் கண் கண் ஒரு துளி விழுது ஒரு துளி விழுது..
ஒரு துளி இரு துளி சில துளி பல துளி படபடவென தடதடவென சிதறுது..

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ..
மின்னல் ஒளியில் நூல் எடுத்து கோர்த்து வைப்பேனோ..
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ..
மின்னல் ஒளியில் நூல் எடுத்து கோர்த்து வைப்பேனோ..
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்..
நான் சக்கரவாக பறவை ஆவேனோ..
மழையின் தாரைகள் வைர விழுதுகள்..
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ..

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ..
மின்னல் ஒளியில் நூல் எடுத்து கோர்த்து வைப்பேனோ..

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்..
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்..
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்..
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்..
அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது..
அட இந்த வயது கழித்தால் பிறகெங்கு நனைவது..
இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது..
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்..
நான் சக்கரவாக பறவை ஆவேனோ..
மழையின் தாரைகள் வைர விழுதுகள்..
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ..

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்..
ஒரு கருப்பு கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்..
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பி கொள்ள வேண்டாம்..
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்..
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்..
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்..
நீ கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்..
நீ கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்..
ஓஓஓ..ஓஓஓ..ஓஓஓ..
ஓ..ஓஓ..ஓஓஓ..ஓஓ..
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்..
நான் சக்கரவாக பறவை ஆவேனோ..
மழையின் தாரைகள் வைர விழுதுகள்..
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ..

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ..
மின்னல் ஒளியில் நூல் எடுத்து கோர்த்து வைப்பேனோ..
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ..
மின்னல் ஒளியில் நூல் எடுத்து கோர்த்து வைப்பேனோ..

Top viewed posts of the week