RAASATHI
ராசாத்தி
Movie: Thiruda Thiruda
Singers: shahul hameed, sujatha mohan, ganga sitharasu, minmini
Music director: A.R.Rahman
ராசாத்தி என் உசுரு என்னதில்ல..ம்ம் ம்ம்..
பூ சூடி வாக்க பட்டு போற புள்ள..ம்ம் ம்ம்..
நீ போனா என் ஒடம்பு மண்ணுக்குள்ள.. ம்ம் ம்ம்..
ராவோடு சேதி வரும் வாடி புள்ள.. ம்ம் ம்ம்..
ராசாத்தி என் உசுரு என்னதில்ல..ம்ம் ம்ம்..
கார வீட்டு திண்ணையில கரிக்கு மஞ்சள் அரைக்கையில..
மஞ்சள அரைக்கும் முன்ன மனச அரச்சவளே..
கரிசா காட்டு ஓடையில கண்டாங்கி தொவைக்கையில..
துணிய நனைய விட்டு மனச புழிஞ்சவளே..
அந்த களத்துமேட்டில் என்னை இழுத்து முடிஞ்சுகிட்டு போறவளே
போறவ போறவதான் போர்த்திகிட்டு போனவதான்..
அந்த கல்யாண சேலையில கண்ணீரை துடைச்சிகிட்டு போறவளே..
போறவ போறவதான் பொஞ்சாதியா போனவதான்..
நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப்பூ சூடி அழுதபடி போறவளே..
கடல காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள..
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல..
கடல காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள..
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல..
ராசாத்தி என் உசுரு என்னதில்ல..ம்ம் ம்ம்..
பூ சூடி வாக்க பட்டு போற புள்ள..ம்ம் ம்ம்..
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள.. ம்ம் ம்ம்..
ராவோடு சேதி வரும் வாடி புள்ள.. ம்ம் ம்ம்..
ராசாத்தி என் உசுரு என்னதில்ல..ம்ம் ம்ம்..
தொட்டு தொட்டு பொட்டு வச்ச சுட்டு விரல் காயலியே..
மரிகொழுந்து வச்ச கையில் வாசம் இன்னும் போகலையே..
மருதையில வாங்கி வந்த வலவி ஒடையலயே..
மல்லு வேட்டி மத்தியில மஞ்ச கறை மாறலையே..
அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ..
பாப்பதெப்போ பாப்பதெப்போ பௌர்ணமியும் வாரதெப்போ..
அந்த கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ..
கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரதண்டு பூப்பதெப்போ..
கருவேலங்காட்டுக்குள்ள கரிச்சான்குருவி ஒன்னு
சுதி மாறி கத்துதம்மா தொணைய தான் காணோமுன்னு..
கடல காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள..
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல..
கடல காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள..
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல..
ராசாத்தி என் உசுரு என்னதில்ல..ம்ம் ம்ம்..
பூ சூடி வாக்க பட்டு போற புள்ள..ம்ம் ம்ம்..
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள.. ம்ம் ம்ம்..
ராவோடு சேதி வரும் வாடி புள்ள.. ம்ம் ம்ம்..
ராசாத்தி என் உசுரு என்னதில்ல..ம்ம் ம்ம்..
பூ சூடி வாக்க பட்டு போற புள்ள..ம்ம் ம்ம்..
...........................
Songs lyrics from Thiruda Thiruda movie: