VETRI VELADA

 வெற்றி வேலடா




Movie: Jayam

Starring: Jayam ravi, Sadha

Music director: R.P.Patnaik


வெற்றி வேலடா..
இது வீர வேலடா..
இந்த வேலை ஏந்தும் வேளை உன்னை வெல்பவன் யாரடா..
வெற்றி கொள்ளடா..
பகை வேரை கிள்ளடா..
உன் காதல் வீரம் ரெண்டும் வாழ வேங்கையாய் நில்லடா..
மிதிப்படும் நிலமென பொறுப்பது காதல்..
எரிமலை நெருப்பென வெடிப்பதும் காதல்..
பகைவனை எரித்திட ஒருமுறை வெடிப்பாயே..
அழுவதும் தொழுவதும் கோழைகள் பழக்கம்..
தமிழ்மகன் உடலுக்கு தழும்புகள் பதக்கம்..
எதிரியின் முகத்தினில் உன் பெயர் பொறிப்பாயே..
சிரித்தால் பகையே அவன் கேலி சுடவில்லையா..
காதல் வெல்லும் நேரம் தான் இது இல்லையா..
துளிதான் நெருப்பே அது காட்டை சுடும் இல்லையா..
சொல்லு உந்தன் நெஞ்சுக்குள் நெருப்பில்லையா..
உன் காதல் தேவதை யாசித்தால் உன் உடலும் உயிரும் தந்துவிடு..
ஒரு போரை பகைவன் நேசித்தால் அவன் எலும்பை சுட்டுவிடு..
ஜெயம்..நிச்சயம்..
நிச்சயம் நிச்சயம்..
ஜெயம்..நிச்சயம்..
உன் ஜெயம் நிச்சயம்..