KONJAM NILAVUU-CHANDRALEKHA

  சந்திரலேகா




Movie: Thiruda Thiruda 

Singers: Anupama,  Suresh Peters 

Music director: A.R.Rahman 

பெண்: கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு..
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்..
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்..
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்..
கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்..
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்..
சந்திரலேகா ஆஆஆ சந்திரலேகா..
சந்திரலேகா ஆஆஆ சந்திரலேகா..

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு..
ஒன்றாக சேர்த்தால் எந்தன் தேகம்..

என் கனவில்..எவனோ ஒருவன்..
என் இரவில்..ஒளியாய் தெரிவான்..
வான் மழை போல் உயிரில் உயிரில் விழுவான்..
தினம் நான் விரும்பும் வகையில்  பொழிவான்..
தேன் இதழை இவள் தந்து மாயாது..
இனி பாற்கடலில் அலை என்றும் ஓயாது..
வந்து நான் மண்ணிலே..
ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது..
இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது..

ஆண்: மங்கை உன் கால் பட்டால் மண்ணும் ஒரு மண்ணல்ல..
வெள்ளை பொன் தேகத்தில் வேர்வை துளி உப்பல்ல..
செந்தாழம் பூவுக்கு முள் ஒன்றும் குறையல்ல..
உள்ளொன்று வைத்தாலும் உன் மீது பிழையல்ல..

பெண்: கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு..
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்..
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்..
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்..
கொஞ்சம் மிருகம்..கொஞ்சம் மிருகம்..
கொஞ்சம் கடவுள்..கொஞ்சம் கடவுள்..
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்..
சந்திரலேகா ஆஆஆ சந்திரலேகா..
சந்திரலேகா ஆஆஆ சந்திரலேகா..

ஆண்: பெண்ணே உன் கண்ணாளன் பிறையேறி வருவானே.. 
விண் கொண்ட மீனெல்லாம் விளையாட தருவானே..

பெண்: கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு..
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்..
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்..
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்..
கொஞ்சம் மிருகம்..கொஞ்சம் மிருகம்..
கொஞ்சம் கடவுள்..கொஞ்சம் கடவுள்..
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்..
சந்திரலேகா ஆஆஆ சந்திரலேகா..
சந்திரலேகா ஆஆஆ சந்திரலேகா..