THOOKU CHATTIYA

 தூக்குச்சட்டிய


Movie:  Ejaman

Singer:  malaysia vasudevan

Music director:  Ilayaraja


தூக்குச்சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடிடா..
எதுல என்ன இருக்குதுனு கண்டுபுடிதோம்

தூக்குச்சட்டிய தூக்கி பாத்து மோப்பம் புடிடா..
எதுல என்ன இருக்குதுனு கண்டுபுடிடா..
பல வீட்டு சோத்து ருசி பாத்துபுட்டா கஷ்டமடா..
ஒரு வீட்டில் இத்தனையும் கெடைக்கிறதும் கஷ்டமடா..
யாரும் பார்க்காம தெரியாம ..
தெரிஞ்சி போச்சுனா தலை கவிந்து நிக்கோணும்..
கெடச்சதெல்லாம் எடுத்து வைய்யி..
முடிஞ்சதுனா மிச்சம் வைய்யி..

தூக்குச்சட்டிய தூக்கி பாத்து மோப்பம் புடிப்போம்..
எதுல என்ன இருக்குதுனு கண்டுபுடிப்போம்..
தூக்குச்சட்டிய தூக்கி பாத்து மோப்பம் புடிப்போம்..
எதுல என்ன இருக்குதுனு கண்டுபுடிப்போம்..
தூக்குச்சட்டிய தூக்கி பாத்து மோப்பம் புடிப்போம்..
எதுல என்ன இருக்குதுனு கண்டுபுடிப்போம்..

கம்மன்சோறு கத்திரிக்கா கூட்டு இருக்கு..
நேத்து வெச்ச மீன் குழம்பு இங்கே இருக்கு..
கேப்ப களி குச்சி கருவாடும் இருக்கு..
சாம சோறு சனம்பு கீரை பருப்பும் இருக்கு..
பொறிச்ச வாத்து முட்டை வாசம்..ஆ..ஆ..
பொறிச்ச வாத்து முட்டை வாசம் பருத்தி காட்டு வரைக்கும் வீசும்..
ஆமா.. பொறிச்ச வாத்து முட்டை வாசம் பருத்தி காட்டு வரைக்கும் வீசும்..
செட்டி நாட்டு ஆச்சி சுட்ட முட்ட தோச நாக்கில் பேசும்..
தரிகிட தோம் தரிகிட தோம்..
தரிகிட தோம் தரிகிட தோம் தத்தி தோம்..
நெல்லி சோறும் கொள்ளு சாறும் மனச கொள்ளை அடிக்கும் பாரு..
ஐயோ‌.. சோள சோறும் புளிச்ச மோரும் ரசிச்சு ரசிச்சு குடிச்சு பாரு..
அட புளிச்ச தண்ணி கூட சேர்த்து வெங்காயத்த கடிக்க வேணும்..
பொறிச்ச மொளகு வத்தலோட கரைச்சி கரைச்சி குடிக்க வேணும்..
யாரும் பாக்காம தெரியாம திங்கோணும்..
தெரிஞ்சி போச்சுனா தலை கவிந்து நிக்கோணும்..
கோழி கொழம்பிருக்கு கூடி திங்க தெம்பிருக்கு..
அத்தனையும் முடிச்சிடாம மிச்சம் வைய்யுடா..
மத்தவங்க தெரிஞ்சுகிட்டா மானம் போகும் டா..டேய்..

கம்மன்சோறு கத்திரிக்கா கூட்டு இருக்கு..
நேத்து வெச்ச மீன் குழம்பு இங்கே இருக்கு..
பல வீட்டு சோத்து ருசி பாத்துபுட்டா கஷ்டமடா..
ஒரு வீட்டில் இத்தனையும் கெடைக்கிறது கஷ்டமடா..
யாரும் பார்க்காம தெரியாம தின்னாச்சு..
திருடி தின்னாலே ஒரு சுகம் இருக்குது..
வயிறு நெறஞ்சு போச்சு..
வாய் செவக்க வெத்தல போடு..

கம்மன்சோறு கத்திரிக்கா கூட்டு இருக்கு..
நேத்து வெச்ச மீன் குழம்பு இங்கே இருக்கு..
கேப்ப களி குச்சி கருவாடும் இருக்கு..
சாம சோறு சனம்பு கீரை பருப்பும் இருக்கு..
ஆ..பருப்பும் இருக்கு..
ஆஆ..ஆ..பருப்பும் இருக்கு..


 


....................





Songs lyrics from Ejaman movie:-