EJAMAN KAALADI MANN EDUTHU

 எஜமான் காலடி மண் எடுத்து

Movie:  Ejaman

Singer:  Malaysia vasudevan 

Music director:  Ilayaraja

எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்..
நெஜமா அவன் சொல்லுக்கு தான் நாங்க தெனம் கட்டுபட்டோம்..

எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்..
நெஜமா அவன் சொல்லுக்கு தான் நாங்க தெனம் கட்டுபட்டோம்..
உங்கள தான் நம்புதிந்த பூமி..
இனி எங்களுக்கு நல்ல வழி காமி..
உங்கள தான் நம்புதிந்த பூமி..
இனி எங்களுக்கு நல்ல வழி காமி..

எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்..
நெஜமா அவன் சொல்லுக்கு தான் நாங்க தெனம் கட்டுபட்டோம்..

ஊருசனம் தான் வாழ நல்ல காலம் வந்தாச்சு..
நேத்து வர நான் பாத்த துன்பம் யாவும் போயாச்சு..
வீடு வர ஆத்து தண்ணி வந்து தாகம் தீந்தாச்சு..
வீதியெல்லாம் பள்ளிக்கூட பெல்லு ஓச கேட்டாச்சு..
இல்லாமை இங்க கிடையாது..
எங்க எஜமான் இருக்கையிலே..
பொல்லாப்பு நம்ம நெருங்காது..
எஜமான் உங்க காவலிலே   
உங்கள தான் நம்புதிந்த பூமி..
இனி எங்களுக்கு நல்ல வழி காமி..

எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்..
நெஜமா அவன் சொல்லுக்கு தான் நாங்க தெனம் கட்டுபட்டோம்..

தோட்டம் காடு மேடெல்லாம் சொந்தம் தேடும் தொழிலாளி..
ஏழை கூட்டம் முன்னேற நீங்கதானே கூட்டாளி..
ஊருக்கொரு கஷ்டம் வந்தா பங்கு போடும் பாட்டாளி..
உள்ள படி நீதி சொல்ல தேவையில்ல நாற்காலி..
தன்னாலே வணங்குது ஊரு..
எங்க எஜமான் நடக்கையிலே..
எந்நாளும் கொறை கிடையாது..
எஜமான் இங்க இருக்கையிலே..