NILAVE MUGAM KAATU
நிலவே முகம் காட்டு
Movie: Ejaman
Singers: S.P.Balasubramaniam, S.Janaki
Music director: Ilayaraja
ஆண்: நிலவே முகம் காட்டு..
எனை பார்த்து ஒளி வீசு..
அலை போல் சுதி மீட்டு..
இனிதான மொழி பேசு..
இளம் பூங்கொடியே இது தாய் மடியே..
பெண்: நிலவே முகம் காட்டு..
எனை பார்த்து ஒளி வீசு..
அலை போல் சுதி மீட்டு..
இனிதான மொழி பேசு..
அணைத்தேன் உனையே இது தாய் மடியே..
ஆண்: நிலவே முகம் காட்டு..
பெண்: பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா..
இனிதான தென்றல் உன்னையே ஊரும் குறை சொல்லலாமா..
ஆண்: காலம் மாறும் கலக்கம் ஏனம்மா..
இரவில்லாமல் பகலும் ஏதம்மா..
நான் உன் பிள்ளை தானம்மா..
பெண்: நானும் கண்ட கனவு நூறய்யா..
எனது தாயும் நீங்கள் தானய்யா..
இனி உன் துணை நானய்யா..
ஆண்: எனை சேர்ந்தது கொடி முல்லையே..
இது போலே துணையும் இல்லையே..
இனி நீ என் தோளில் பிள்ளையே..
ஆண்: நிலவே முகம் காட்டு..
எனை பார்த்து ஒளி வீசு..
பெண்: அணைத்தேன் உனையே இது தாய் மடியே..
ஆண்: சுமை போட்டு பேசும் ஊரென்றால் மனம் தவித்திடும் மானே..
இமை மீறும் கண்ணின் நீரென்றால் தினம் குடிப்பவன் நானே..
பெண்: மாலையோடு நடக்கும் தேரய்யா..
நடக்கும்போது வணங்கும் ஊரய்யா..
உன்னை மீற யாரய்யா..
ஆண்: மாமன் தோளில் சாய்ந்த முல்லையே..
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே..
நீ என் வாழ்வின் எல்லையே..
பெண்: இதை மீறிய தவம் இல்லையே..
இனி எந்த குறையுமில்லையே..
தினம் தீரும் தீரும் தொல்லையே..
நிலவே முகம் காட்டு..
எனை பார்த்து ஒளி வீசு..
அலை போல் சுதி மீட்டு..
இனிதான மொழி பேசு..
ஆண்: இளம் பூங்கொடியே இது தாய் மடியே..
நிலவே முகம் காட்டு..
எனை பார்த்து ஒளி வீசு..
....................
Songs lyrics from Ejaman movie:-
