AALAPOL VELAPOL

 ஆலப்போல்...


Movie:  Ejaman 

Singers: S.P.B, Chithra

Music director: Ilayaraja


பெண்: ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுது போல்..
மாமன் நெஞ்சில் நானிருப்பேனே..
நாலப்போல் ரெண்டப்போல் நாளும் பொழுதுப்போல்..
நானும் அங்கு நின்றிருப்பேனே..
பதில் கேளு அடி கண்ணம்மா....ஆ..ஆ..
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா..
என்னம்மா கண்ணம்மா ஓய்..

ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுது போல்..
மாமன் நெஞ்சில் நானிருப்பேனே..

பெண்:  என் மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு..
இன்னுமென்ன வேணுமுன்னு உத்தரவு போட சொல்லு..

ஆண்: கொத்து மஞ்சள் தான் அரைச்சு நித்தமும் நீராட சொல்லு..
மீனாட்சி குங்குமத்த நெத்தியில சூட சொல்லு..

பெண்: சொன்னத நானும் கேக்குறேன்..
சொர்ணமே அங்க போய் கூறிடு..

ஆண்:  அஞ்சல மால போடுறேன்..
அன்னத்தின் காதுல ஓதிடு..

பெண்: மாமன் நெனைப்புதான்.. மாசக்கணக்கில.. பாடாபடுத்துதென்னையே..
புது பூவா வெடிச்சதென்னையே..

ஆண்:  ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுது போல்..
ஆசை நெஞ்சில் நானிருப்பேனே..

பெண்:  நாலப்போல் ரெண்டப்போல் நாளும் பொழுதுப்போல்..
நானும் அங்கே நின்றிருப்பேனே..

ஆண்:  வேலங்குச்சி நான் வளைச்சி வில்லுவண்டி செஞ்சி தாரேன்..
வண்டியிலே வஞ்சி வந்தா வளச்சி கட்டி கொஞ்ச வாரேன்..

பெண்:  ஆலங்குச்சி நான் வளைச்சி பல்லக்கொண்ணு செஞ்சி தாரேன்..
பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சி கொஞ்ச வாரேன்..

ஆண்:  வட்டமாய் காயும் வெண்ணிலா..
கொல்லுதே கொல்லுதே ராத்திரி..

பெண்:  கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்தூசி மாதிரி.

ஆண்: ஊரும் உறங்கட்டும்.. ஓசை அடங்கட்டும்..
காத்தா பறந்து வருவேன்.. புது பாட்டா படிச்சு தருவேன்..

பெண்: ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுது போல்..
மாமன் நெஞ்சில் நானிருப்பேனே..
நாலப்போல் ரெண்டப்போல் நாளும் பொழுதுப்போல்..
நானும் அங்கு நின்றிருப்பேனே..

ஆண்: பதில் கேளு அடி கண்ணம்மா....ஆ..ஆ..
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா..
என்னம்மா கண்ணம்மா ஓய்...

ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுது போல்..
ஆசை நெஞ்சில் நானிருப்பேனே..

பெண்:  நாலப்போல் ரெண்டப்போல் நாளும் பொழுதுப்போல்..
நானும் அங்கே நின்றிருப்பேனே..