ADI RAAKUMUTHU RAAKU

 அடி ராக்குமுத்து ராக்கு



Movie : Ejaman

Singers: S.P.Balasubramaniam 

Music director: Ilayaraja 


அடி ராக்குமுத்து ராக்கு..
புது ராக்குடிய சூட்டு..
வளைகாப்பு தங்க காப்பு..
இவ கை பிடிச்சு பூட்டு..
அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா..
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா..
கிளி மூக்கு முத்தம்மா..
என் வாக்கு சுத்தம்மா..
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு..

அடி ராக்குமுத்து ராக்கு..
புது ராக்குடிய சூட்டு..

வான் சுமந்த வான் சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ..
தான் சுமந்த தான் சுமந்த பெண்ணிலவே பெண்ணிலவே..
மூணுமாசம் ஆனப்பின்னே முத்து வரும் முத்து வரும்..
பூர்வ ஜென்மம் சேர்த்து வச்ச சொத்து வரும் சொத்து வரும்..
வெள்ளிமணி தொட்டில் ஒன்னு..
விட்டத்தின் மேலே மாட்டிடணும்..
தங்கமணி கண்ணுறங்க..
தாலேலோ பாடி ஆட்டிடணும்..

அடி வாடி ரங்கம்மா..
தெரு கோடி அங்கம்மா..
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு..

அடி ராக்குமுத்து ராக்கு..
புது ராக்குடிய சூட்டு..

ஏழு சனி மார்கழிக்கும் பொங்க வச்சு பொங்க வச்சு..
மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடணும் ஏற்றிடணும்..
வாரிசு ஒன்னு தந்ததற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி..
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடணும் ஊத்திடணும்..
அம்மன் அருள் இல்லையின்னா..
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே..
பிள்ளை செல்வம் இல்லை என்ற..
பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே..

ஊரில் எல்லாரும் ஒன்னு சேரும் இந்நேரம்
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு..

அடி ராக்குமுத்து ராக்கு..
புது ராக்குடிய சூட்டு..
அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா..
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா..
கிளி மூக்கு முத்தம்மா..
அவர் வாக்கு சுத்தம்மா..
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு..

அடி ராக்குமுத்து ராக்கு..
புது ராக்குடிய சூட்டு..

அடி ராக்குமுத்து ராக்கு..
ராக்குடிய சூட்டு..
வளைகாப்பு தங்க காப்பு..
இவ கை புடிச்சு பூட்டு..