THANGA MAGAN INDRU
தங்க மகன் இன்று
Movie: Baatsha
Singers: K.J.Yesudas, K.S.Chithra
Music director: Deva
பெண்: தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்..
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்..
தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்..
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்..
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே..
வெட்க தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதே..
இரத்த தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா..
ஆண்: தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்..
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்..
ஆண்: சின்ன கலை வாணி நீ வண்ண சிலை மேனி..
அது மஞ்சம் தனி மாறன் தலை வைக்கும் இன்ப தலைக்காணி..
பெண்: ஆசை தலைவன் நீ நான் அடிமை மகாராணி..
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி..
ஆண்: பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்..
பெண்: தென் பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும்..
ஆண்: என்ன சம்மதமா..
பெண்: இன்னும் தாமதமா..
ஆண்: தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்..
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்..
பெண்: தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்க்காது..
ஆண்: மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது..
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதி தான் மாறாது..
பெண்: என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்..
ஆண்: கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்..
பெண்: என்னை மாற்றிவிடு..
ஆண்: இதழ் ஊற்றி கொடு..
பெண்: தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்..
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்..
ஆண்: தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்..
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்..
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ..
வெட்க தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதோ..
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா..
பெண்: தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்..
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்..
......................
Songs lyrics from Baatsha movie: