NEE NADANDHAL NADAI AZHAGU

 நீ நடந்தால் நடை அழகு



Movie: Baatsha

Singers: S.P.Balasubramaniam, K.S.Chithra

Music director: Deva


பெண்: அழகு..அழகு..
நீ நடந்தால் நடை அழகு..அழகு..
நீ சிரித்தால் சிரிப்பழகு..அழகு..
நீ பேசும் தமிழ் அழகு..அழகு..
நீ ஒருவன் தான் அழகு..அழகு..அழகு..
ஓ..நெற்றியிலே சரிந்து வீழும் நீள முடி அழகு..
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு.. அழகு..அழகு..

ஆண்: நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல..
என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல..
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல..
இன்று கட்டியணைத்தேன் இது கற்பனை அல்ல..

பெண்: அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும் ஆசையை திருகிவிடு..
இருவிழி மயங்கி இதழ்களில் இறங்கி உயிர் வரை பருகிவிடு..

ஆண்: ஓ முத்தம் வழங்காது இரத்தம் அடங்காது..

பெண்: அழகு..அழகு..
ஆ நீ நடந்தால் நடை அழகு..அழகு..
நீ சிரித்தால் சிரிப்பழகு..அழகு..
நீ பேசும் தமிழ் அழகு..அழகு..
நீ ஒருவன் தான் அழகு..அழகு..அழகு..

பெண்: நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம்தானே..
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே..
அந்த வான்மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே..
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே..

ஆண்: மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு மது ரசம் அருந்தட்டுமா..
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில் கவிதைகள் எழுதட்டுமா..

பெண்: முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா..
அழகு..அழகு..

ஆண்: ஓ நீ நடந்தால் நடை அழகு.. அழகு..
நெருங்கி வரும் இடை அழகு..அழகு..
வேல் எறியும் விழி அழகு..அழகு..
பால் வடியும் முகம் அழகு.. அழகு..அழகு..
ஓ.. தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு..
தள்ளி நின்று எனை அணைக்கும் தாமரையும் அழகு..

பெண்: அழகு..அழகு..அழகு..அழகு..