KAVITHAIYE THERIYUMA
கவிதையே தெரியுமா
Movie: Jayam
Singers: R.P.Patnaik, Harini, Manika vinayagam
Music director: R.P.Patnaik
ஆண்: கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி..
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி..
இமை மூட மறுக்கின்றதே ஆவலே..
இதழ் சொல்ல துடிக்கின்றதே..
காதலே..
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி..
கவிதையே தெரியுமா..
பெண்: குறும்பில் வளர்ந்த உறவே..
என் அறையில் நுழைந்த திமிரே..
ஆண்: மனதை பறித்த கொலுசே..
என் மடியில் விழுந்த பரிசே..
பெண்: ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து என்னை தாலாட்டுதே..
ஆண்: வானம் காணாத வெண்ணிலவொன்று மோக பாலூட்டுதே..
பெண்: நாணம் பொய் நீட்டுதே..ஏ..ஏஏ..
ஆண்: கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி..
கவிதையே தெரியுமா..
தகிடததுமி தகிடததுமி தந்தானா..
இதய ஒலியும் ஜதியும் எனது தில்லானா..
தகிடததுமி தகிடததுமி தந்தானா..
இதய ஒலியும் ஜதியும் எனது தில்லானா..
ஆண்: உயிரில் இறங்கி வரவா..
உன் உடலில் கரைந்து விடவா..
பெண்: உறக்கம் திறக்கும் திருடா..
என் கனவில் பதுங்கி இருடா..
ஆண்: புடவையாய் மாறி பொன்னுடல் மூடி உன்னுடன் வாழவா..
பெண்: இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா..
ஆண்: வேர்வை குடை தேடவா..ஆ...
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி..
பெண்: இதயமே தெரியுமா உனக்காகவே நானடா..
ஆண்: இமை மூட மறுக்கின்றதே காதலே..
ஆ&பெ: இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே..
........................
Songs lyrics from Jayam movie:
