POO PARIKKA NEEYUM

 பூப்பறிக்க நீயும் போகாதே



Movie: Unakum enakum 

Singer: Shankar mahadevan 

Music director: Devi sri prasad


பூப்பறிக்க நீயும் போகாதே..
உன்ன பாத்தாலே..
பூக்களுக்குள் கத்தி சண்டையடி..
தந்தானே..தந்தானே ..
பொட்ட வைக்க நீயும் போகாதே..
உன்ன பார்த்தாலே..
கண்ணாடி கைகள் நீட்டுமடி..
தந்தானே தந்தானே..
கோயிலுக்கு நீயும் போகாதே..
கோபுரங்கள் சாஞ்சு பாக்குமடி..
பாக்குமடி..
காட்டுக்குள்ள நீயும் போகாதே..
கொட்டுகிற தேனீ கூட்டம் தேனெடுக்க ஒதட்ட சுத்துமடி..

ஓஓ..ஓ..ஓ..பூப்பறிக்க நீயும் போகாதே..
உன்ன பாத்தாலே..
பூக்களுக்குள் கத்தி சண்டையடி..ஓ..

சூறாவளி போல போகிற..
இந்த இளமைய யாராச்சும் தடுக்க முடியுமா..
சுத்தி சுத்தி ஆட்டம் போடுற இந்த வயசிடம்..
யாராச்சும் நெருங்க முடியுமா..

ஆத்துக்குள்ள நீ குளிச்சா..
அங்கு உள்ள மீனு எல்லாம்..
மீசையெல்லாம் சுத்திகிட்டு அலையுதடி..
ஆட்டுக்குட்டி கூட இப்ப..
தாடி ஒன்னு வச்சுகிட்டு..
ஒருதலை காதலுடன் திரியுதடி..
குச்சுபுடி கதகளி எல்லாம்...
உன் நடையிலே..புதுபுது பாடம் படிக்குமே..
ரங்கோலி கோலம் எதுக்கடி..
கொஞ்சம் வெட்கபடு..
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே..

நாடு விட்டு நாடு வரும் வேடந்தாங்கல் வெள்ள புறா..
யார் மனதில் கூடு கட்ட வருகிறதோ..
கால் முளைச்ச சூரியனா..
தூள் கெளப்பி சுத்துறியே..
உன்னிடத்தில் எந்த நிலா ஒளி பெறுமோ..
வட்டம் இடும் பட்டாம்பூச்சியே..
உன் வண்ணமெல்லாம்..
ஒட்டி கொள்ள பூவும் பூத்திருக்கு..
திட்டம் இல்ல திசையும் இல்லையே..
உன் வாலிபம்..பறந்திட தடையும் எங்கிருக்கு..



................



Songs lyrics from unakum enakum movie:-