UN PARVAIYIL

 

உன் பார்வையில் 


Movie: Unakum enakum

Singers: Karthik, sumangali

Music director: Devi sri prasad


ஆண்: உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்..
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்..
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்..
ஒரு ஞாபக அலையென வந்து என் நெஞ்சினை நனைத்தவள் நீயே..
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்..
பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலே செய்தேன்..
உன்னோட அறிமுகத்தாலே..நான் உன்னில் மறைமுகம் ஆனேன்..
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே..

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்..
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்..
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்..

ஆண்:  எது இதுவோ..எது இதுவோ..
உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள் என்னென்று நான் சொல்லுவேன்..

பெண்: இது அதுவோ..இது அதுவோ..
சொல்லாத சொல்லுக்கு..இல்லாத வார்த்தைக்கு ஏதேதோ அர்த்தங்களே..

ஆண்: பெண் தோழன் நான்..ஆண் தோழி நீ..
நட்புக்குள் நம் காதல் வாழும்..

பெண்: ஆண் ஆசை நான்.. பெண் ஆசை நீ..
ஆசைகள் பேராசை தான்..

ஆண்: உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்..
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்..
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்..

பெண்:  ஓ..உனதருகே..இருப்பதனால்..
இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத பொழுதொன்று நீ காட்டினாய்..

ஆண்: இதயத்தில் நீ.. இருப்பதனால்..
நான் தூங்கும் நேரத்தில்..
என்னுள்ளே தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய்..

பெண்:  கண்ணாடி நீ..கடிகாரம் நான்..
உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்..

ஆண்: காதல் எனும் கடுதாசி நீ..
என்றென்றும் அன்புடன் நான்..

ஆண்: ஏ..உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்..
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்..
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்..

பெண்:  ஒரு ஞாபக அலையென வந்து உன் நெஞ்சினை நனைத்தவள் நானே..
உன் வாலிப திமிரினில் நானும் மயங்கினேன்..

ஆண்: பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலே செய்தேன்..

பெண்: உன்னோட அறிமுகத்தாலே..நான் உன்னில் மறைமுகம் ஆனேன்..

ஆண்:  நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே..



..............


Song lyrics from unakum enakum movie:-