KADHALIKUM PENNIN

 காதலிக்கும் பெண்ணின்


Movie: kadhalan 

Singers: S.P.Balasubramaniam,  Udit narayan, S.P.Pallavi

Music director:  A.r.rahman 


ஆண்:  காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்..
சின்ன தகரம் கூட தங்கம் தானே..
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே..
மின்னும் பருவும் கூட பவளம் தானே..
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்..
சின்ன பார்வை மோட்சம் ஆகும்..
காதலின் சங்கீதமே..ம்ம்..
பூமியின் பூபாளமே..
காதலின் சங்கீதமே..ம்ம்..
பூமியின் பூபாளமே..

ஆண்: காதலிக்கும் பெண் வடிக்கும் கை எழுத்திலே..
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே..

பெண்:  காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே...

ஆண்:  குண்டு மல்லி.. ரெண்டு ரூபாய்..
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்..

பெண்: பஞ்சு மிட்டாய்.. அஞ்சு ரூபாய்..
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்..

பெண்: காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்..
சின்ன தகரம் கூட தங்கம் தானே..
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே..
மின்னும் பருவும் கூட பவழம் தானே..

ஆண்: சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்..
சின்ன பார்வை மோட்சம் ஆகும்..

பெண்:  காதலின் சங்கீதமே....

ஆண்: ம்ம்..பூமியின் பூபாளமே..

பெண்: காதலின் சங்கீதமே....

ஆண்: ம்ம்..பூமியின் பூபாளமே..

பெண்: காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே..
ராகு காலம் கூட ராசி ஆகுமே..

ஆண்: காதலுக்கு அன்னபட்சி தேவையில்லையே..
காக்கை கூட தூது போகுமே..

பெண்:  காதல் ஜோதி புதைவதில்லை..
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை..

ஆண்: இதில் அற்பமானது எதுவும் இல்லை..
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை..

பெண்:  வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே..
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே..
காதல் கெட்ட வார்த்தையா
என்ன யாரும் சொல்லலாம் நீ சொல்ல வேண்டும் என்று..
காதல் முள்ளின் வேலியா
என்ன யாரும் செல்லலாம் நீ செல்ல வேண்டும் என்று..



.............



Songs lyrics from kadhalan movie:-