EN KAADHALE

 என் காதலே



Movie: Duet

Singers: S.P.Balasubramaniam 

Music director: A.r.rahman 


என் காதலே என் காதலே..
என்னை என்ன செய்யப் போகிறாய்..
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ..
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்..
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்..
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்..

என் காதலே என் காதலே..
என்னை என்ன செய்யப் போகிறாய்..
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ..
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்..

காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்..
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்..
இனி மீள்வதா..ஆ...இல்லை வீழ்வதா..ஆ..
உயிர் வாழ்வதா..ஆ..இல்லை போவதா..ஆ
அமுதென்பதா விஷம் என்பதா.. 
உன்னை அமுத விஷமென்பதா..

என் காதலே என் காதலே..
என்னை என்ன செய்யப் போகிறாய்..
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ..
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்..

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்..
கண்களை நீ மூடி கொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்..
இது மாற்றமா ...ஆ...தடுமாற்றமா..ஆ..
என் நெஞ்சிலே..ஏ.. பனி மூட்டமா..
நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா..

என் காதலே என் காதலே..
என்னை என்ன செய்யப் போகிறாய்..
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ..
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்..
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்..
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ...



...............


Songs lyrics from Duet movie:- 

Top viewed posts of the week