KANNODU KAANBADHELLAM

 கண்ணோடு காண்பதெல்லாம்



Movie :  Jeans 

Singer: Nithyashree mahadevan

Music director: A.r.rahman 


கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை..
கண்களுக்கு சொந்தமில்லை..
கண்ணோடு மணியானாய்..அதனால்
கண்ணைவிட்டு பிரிவதில்லை..
நீ என்னை விட்டு பிரிவதில்லை..

சலசல சலசல ரெட்டைகிளவி..
தகதக தகதக ரெட்டைகிளவி..
உண்டல்லோ..தமிழில் உண்டல்லோ..
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை..
பிரித்து பார்த்தால் பொருளும் இல்லை..
ரெண்டல்லோ ரெண்டும் ஒன்றல்லோ..
தினக்கு தினக்கு தின தில்தில்னானா..
நாகிர்தானி தோகிர்தானி தினதோம்..
தினக்கு தினக்கு தின தில்தில்னானா..
நாகிர்தானி தோகிர்தானி தினதோம்..
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ..
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ..
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ..

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை..
கண்களுக்கு சொந்தமில்லை..

அன்றில் பறவை ரெட்டை பிறவி..
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி..
பிரியாதே விட்டு பிரியாதே..
கண்ணும் கண்ணும் ரெட்டை பிறவி..
ஒருவிழி அழுதால் இருவிழி அருவி..
பொழியாதோ அன்பே வழியாதோ..
தினக்கு தினக்கு தின தில்தில்னானா..
நாகிர்தானி தோகிர்தானி தினதோம்..
தினக்கு தினக்கு தின தில்தில்னானா..
நாகிர்தானி தோகிர்தானி தினதோம்..
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்..
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்..
தாலி கொள்ள மட்டும் தான் தனித்தனியே தேடுகின்றோம்..

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா..
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா..
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா..
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்கு சொந்தமில்லை..
கண்களுக்கு சொந்தமில்லை..
கண்ணோடு மணியானாய்..அதனால்
கண்ணைவிட்டு பிரிவதில்லை..
நீ என்னை விட்டு பிரிவதில்லை..




.....................





Songs lyrics from Jeans movie:-