ANBE ANBE KOLLADHE

 அன்பே அன்பே 


Movie: Jeans

Singer:Hariharan, anuradha sriram

Music director:A.r.rahman 


அன்பே அன்பே கொல்லாதே..
கண்ணே கண்ணை கிள்ளாதே..
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே..
ஐயோ..உன்னசைவில் உயிரை குடிக்காதே..

அன்பே அன்பே கொல்லாதே..
கண்ணே கண்ணை கிள்ளாதே..

பெண்ணே..உனது மெல்லிடை பார்த்தேன்...
அடடா..பிரம்மன் கஞ்சனடி..
சற்றே நிமிர்ந்தேன்..தலை சுற்றி போனேன்..
ஆஹா..அவனே வள்ளலடி..
மின்னலை பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி..
நூறடி பளிங்கை ஆறடி ஆக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி..
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி..
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி..

அன்பே அன்பே கொல்லாதே..
கண்ணே கண்ணை கிள்ளாதே..

கொடுத்து வைத்த பூவே.. பூவே..
அவள் கூந்தல் மணம் சொல்வாயா..
கொடுத்து வைத்த நதியே.. நதியே..
அவள் குளித்த சுகம் சொல்வாயா..
கொடுத்து வைத்த கால் கொலுசே..
அவள் கால் அளவு சொல்வாயா..
கொடுத்து வைத்த மணியே..
மார் அழகை சொல்வாயா..

அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்..
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உறையிடுவேன்..
மேகத்தை பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூ உன்னை தூங்க வைப்பேன்..
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்..
பால் வண்ண பறவை குளிப்பதற்காக..
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்..
தேவதை குளித்த துளிகளை அள்ள..
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்..

அன்பே அன்பே கொல்லாதே..
கண்ணே கண்ணை கிள்ளாதே..
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே..
ஐயோ..உன்னசைவில் உயிரை குடிக்காதே..

அன்பே அன்பே கொல்லாதே..
கண்ணே கண்ணை கிள்ளாதே..





....................






Songs lyrics from Jeans movie:-