POOVUKUL OLINDHIRUKUM
பூவுக்குள் ஒளிந்திருக்கும்
Movie: Jeans
Singers: unni krishnan, sujatha mohan
Music director: A.r.rahman
ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசயம்..
வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..
துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்..
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்..
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்..
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே..
உண்டான காதல் அதிசயம்..ஓ..ஓ..
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் ஓ..ஓ..
பெண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிகூட்டம் அதிசயம்..
வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..
துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்..
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்..
ஆண்: அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்..
பெண்: ஒரு வாசமில்லா கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவை பார்..
பூவாசம் அதிசயமே..
அலைகடல் தந்த மேகத்தில் சிறு துளி கூட உப்பில்லை..
மழைநீரும் அதிசயமே..
ஆண்: மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே..
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்.
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்..
நினைத்தால் நினைத்தால் அதிசயமே..
பெண்: கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம்..ஓ..ஓ..
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்..ஓ..ஓ..
ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிகூட்டம் அதிசயம்..
வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள்அதிசயம்..
துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்..
பெண்: குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்..
ஆண்: அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் ..
ஆண்: வெண்பால் கொண்ட சிறு தீவு இருகால் கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே..
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே..
வாள் மிதக்கும் உன் கண்கள்..
தேன் தெறிக்கும் கன்னங்கள்..
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே..
நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே..
நகமென்னும் கிரீடம் அதிசயமே..
அசையும் வளைவுகள் அதிசயமே..
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் ஓ..ஓ..
பெண்: பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் ஓ..ஓ..
ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிகூட்டம் அதிசயம்..
பெண்: அதிசயம்..
ஆண்: வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..
பெண்: அதிசயம்..
ஆண்: துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்..
பெண்: அதிசயம்..
ஆண்: குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்..
பெண்: அதிசயம்..
ஆண்: அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்..
.....................
Songs lyrics from Jeans movie:-
