ENAKE ENAKA
எனக்கே எனக்கா
Movie: Jeans
Singers: P.Unni krishnan, Pallavi
Music director: A.r.rahman
ஆண்: எனக்கே...எனக்கா..
பெண்: எனக்கே..எனக்கா..
ஆண்: நீ..எனக்கே எனக்கா..
பெண்: ம்ம்ம்..ஆஆஆ..
ஆண்: மதுமிதா..மதுமிதா..மதுமிதா..
ஹைர ஹைர ஹைரப்பா..
ஹைர ஹைர ஹைரப்பா..
ஹைர ஹைர ஹைரப்பா..
ஹைர ஹைர ஹைரப்பா..
50kg தாஜ்மஹால் எனக்கே எனக்கா..
Flight-ல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா..
பெண்: ஹைர ஹைர ஹைரப்பா..
ஹைர ஹைர ஹைரப்பா..
ஆண்: packet size- ல் வெண்ணிலவு எனக்கே எனக்கா..
Fax-ல் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா..
பெண்: முத்த மழையில் நனைஞ்சுக்கலாமா..ஆ..
கூந்தல் கொண்டே துவட்டிக்கலாமா..ஆ..
ஆண்: உன்னை எடுத்து உடுத்திக்கலாமா..
உதட்டின் மேலே படுத்துக்கலாமா..
பட்டுப்பூவே..குட்டி தீவே..
விரல் இடை தொட வரம் கொடம்மா..
ஹைர ஹைர ஹைரப்பா..
ஹைர ஹைர ஹைரப்பா..
50kg தாஜ்மஹால் எனக்கே எனக்கா..
Flight-ல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா..
ஆண்: அன்பே இருவரும் பொடி நடையாக அமெரிக்காவை வலம் வருவோம்..
கடல்மேல் சிவப்பு கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்..
நம் காதலை கவி பாடவே ஷெல்லியின் வைரனின் கல்லறை தூக்கத்தை கலைத்திடுவோம்..
பெண்: விண்ணை தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய்..
உன்னோடு தான் என்னானதோ கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறியில் நீ காற்றை கழிக்கிறாய்
பிள்ளை மனம் பித்தானதோ
என்னாகுமோ ஏதாகுமோ
ஆண்: வாடைக்காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு..
கோடி யுகம் போனாலென்ன காதலுக்கு எப்போதும் வயசாகாது..
பெண்: ஹைர ஹைர ஹைரப்பா..
ஆண்: ஹைர ஹைர ஹைரப்பா..
50kg தாஜ்மஹால் எனக்கே எனக்கா..
Flight-ல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா..
ஹைர ஹைர ஹைரப்பா..
ஹைர ஹைர ஹைரப்பா..
பெண்: செர்ரி பூக்களை திருடும் காற்று காதில் சொன்னது I love you
சைட்ரஸ் மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது I love you
உன் காதலை நீ சொன்னதும்
தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே..
ஆண்: ஒற்றை காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாட தான்
பூமாலையே பூச்சூட வா..
சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது உன் கன்னத்தில் முத்தாட தான்
நானும் உன்னை முத்தாடவா..
பெண்: இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டோர் நிமிடம் உயிரிருக்கும்..
அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது..
ஆண்: ஹைர ஹைர ஹைரப்பா..
ஹைர ஹைர ஹைரப்பா..
50kg தாஜ்மஹால் எனக்கே எனக்கா..
Flight-ல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா..
பெண்: ஹைர ஹைர ஹைரப்பா..
ஹைர ஹைர ஹைரப்பா..
packet size- ல் வெண்ணிலவு உனக்கே உனக்கு..
Fax-ல் வந்த பெண் கவிதை உனக்கே உனக்கு..
ஆண்: உன்னை எடுத்து உடுத்திக்கலாமா..ஆ..
உதட்டின் மேலே படுத்துக்கலாமா..ஆ..
பெண்: முத்த மழையில் நனைஞ்சுக்கலாமா..
கூந்தல் கொண்டே துவட்டிக்கலாமா..
ஆண்: பட்டுப்பூவே..குட்டி தீவே..
விரல் இடை தொட வரம் கொடம்மா..
ஆ&பெ: ஹைர ஹைர ஹைரப்பா..
ஹைர ஹைர ஹைரப்பா..
.....................
Songs lyrics from Jeans movie:-
