KANNAZHAGA
கண்ணழகா
Movie: 3 movie
Singers: Dhanush, shruthi Hassan
Music director: Anirudh Ravichandar
பெண்: கண்ணழகா காலழகா..
பொன்னழகா..பெண் அழகா..
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா..
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா..
ஆண்: உயிரே உயிரே உனை விட எதுவும் உயிரில் பெரிதாய் இல்லையடி..
அழகே அழகே உனை விட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி..
பெண்: எங்கேயோ பார்க்கிறாய்..
என்னென்ன சொல்கிறாய்..
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்..
ஆண்: உனக்குள் பார்க்கிறேன்..
உள்ளதை சொல்கிறேன்..
உன் உயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்..
பெண்: இதழும் இதழும் இணையட்டுமே..
புதிதாய் வழிகள் இல்லை..
ஆண்: இமைகள் மூடி அருகினில் வா..
இதுபோல் எதுவும் இல்லை..
பெண்: உனக்குள் பார்க்கவா..
உள்ளதை கேட்கவா..
என்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா..
ஆண்: கண்ணழகே..பேரழகே..
பெண்ணழகே..என்னழகே..
உயிரே உயிரே உனை விட எதுவும் உயிரில் பெரிதாய் இல்லையடி..
...........
Songs lyrics from 3 movie:-
