NEE MUTHAM ONDRU KODUTHAL

 நீ முத்தம் ஒன்று கொடுத்தால்



Movie: Pokkiri

Singers: Ranjith, Swetha mohan

Music director: Mani sharma


ஆண்: நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்..
நீ வெட்க பட்டு சிரித்தால் செந்தமிழ்..
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்..ஓ.ஓ..ஓ..
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்..
நீ வெட்க பட்டு சிரித்தால் செந்தமிழ்..
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்.. ஓ..ஓ..ஓ..

செங்காந்தள் இதழ் என்பதில் நான் இனிய தமிழ்..
மின் காந்த பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசை தமிழ்..
நீ கொஞ்சம் நாடக தமிழ்..
நீ கொஞ்சம் மன்மத தமிழ்..
உன் தமிழ் என் தமிழ் T A M I L தமிழ் தமிழ்..

ஆண்: அன்பே உன் இதழின் சிணுங்கல் எல்லாம் பிள்ளை தமிழே பிள்ளை தமிழே..
அங்கங்கே உனக்குள் படித்து கொண்டேன் சங்கத்தமிழே சங்கத்தமிழே..

பெண்: நீ என்னை தீண்டினால் என் மேனியில் நாணத்தமிழ்..
நம் காதல் சேர்ந்த பின் தமிழோடு தான் நான்கு தமிழ்..

ஆண்: உன்னை வாசித்தேன்..
நேசித்தேன்..
சுவாசித்தேன்..
யாசித்தேன்..

ஆண்: உன் ஒற்றை விழி பார்வையில் நான் கற்று கொண்டேன் தமிழ்..
உன் கற்றை ஒலி புன்னகை அதில் ஒற்றி கொண்டேன் தமிழ்..
உன் வயசின் மொத்தம் தமிழ்..
உன் அழகின் மொத்தம் தமிழ்..
நீ தமிழ் நான் தமிழ் T A M I L தமிழ் தமிழ்.. 

பெண்: என் வசம் தெறிக்கும் இளமையெல்லாம் கன்னித்தமிழே கன்னித்தமிழே..
உன் வசம் கிடைத்த மறு வருஷம் அன்னை தமிழே அன்னை தமிழே..

ஆண்: காலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்..ஓ..ஓ..
நரை கூடி போகலாம் மாறாதடி ஆசை தமிழ்..ஓ..ஓ..

ஆண்: உன்னை சந்தித்தேன்..
பெண்: உன்னை சந்தித்தேன்..
ஆண்: தித்தித்தேன்..
பெண்: தித்தித்தேன்..
ஆண்: ஜீவித்தேன்..
பெண்: ஜீவித்தேன்..
ஆண்: உயிர் தேய்ந்தேன்..
பெண்: தேய்ந்தேன்..

ஆண்: கண் கண்ணும் முட்டி கொண்ட பின் இரு விண்ணும் மண்ணும் தமிழ்..
மெய் மெய்யும் சேர்ந்து புன்னகை அதில் மையல் கொள்ளும் தமிழ்..
உடல் உற்றார் இந்த தமிழ்..
உயிர் கற்றார் இந்த தமிழ்..
வண்தமிழ் வைத்தமிழ்  T A M I L தமிழ் தமிழ் தமிழ்..

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்..
நீ வெட்க பட்டு சிரித்தால் செந்தமிழ்..
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்.. ஓ..ஓ..ஓ..
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்..
நீ வெட்க பட்டு சிரித்தால் செந்தமிழ்..
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்.. ஓ..ஓ..ஓ..