NALAM NALAM ARIYA AAVAL
நலம் நலம் அறிய ஆவல்
Movie: Kadhal kottai
Singers: S.P.Balasubramaniam, Anuradha sriram
Music director: Deva
பெண்: நலம் நலம் அறிய ஆவல்..
உன் நலம் நலம் அறிய ஆவல்..
நீ இங்கு சுகமே..
நான் அங்கு சுகமா..
ஆண்: நீ இங்கு சுகமே..
நான் அங்கு சுகமா..
நலம் நலம் அறிய ஆவல்..
உன் நலம் நலம் அறிய ஆவல்..
ஆண்: தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே..
பெண்: வேண்டும் ஒரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே..
ஆண்: கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே..
பெண்: என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா..
ஆண்: இரவினில் கனவுகள் தினம் தொல்லையே..
பெண்: உறக்கமே எனக்கில்லை கனவில்லையே..
நலம் நலம் அறிய ஆவல்..
ஆண்: உன் நலம் நலமறிய ஆவல்..
ஆண்: கோவிலிலே நான் தொழுதேன் கோல மயில் உனை சேர்ந்திடவே..
பெண்: கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே..
ஆண்: உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா..
பெண்: வார்த்தையில் தெரியாத வடிவமும் நானா..
ஆண்: நிழல் படம் அனுப்பிடு என்னுயிரே..
பெண்: நிஜம் இன்றி வேறில்லை என்னிடமே..
ஆண்: நலம் நலம் அறிய ஆவல்..
பெண்: உன் நலம் நலம் அறிய ஆவல்..
ஆண்: நீ இங்கு சுகமே..
நான் அங்கு சுகமா..
பெண்: நீ இங்கு சுகமே..
நான் அங்கு சுகமா..
ஆண்: நலம் நலமறிய ஆவல்..
உன் நலம் நலமறிய ஆவல்..
......................
Songs lyrics from Kaadhal kottai movie:-
