AANAZHAGA UN ADIMAI INGE - MOTTU MOTTU MALARADHA MOTTU

 மொட்டு மொட்டு மலராத மொட்டு


Movie: Kadhal kottai

Singers: Swarnalatha

Music director: Deva


மொட்டு மொட்டு மலராத மொட்டு..
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு..
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு..
சிட்டு சிட்டு சிந்தாத சிட்டு..

ஆணழகா உன் அடிமை இங்கே..
நீ தேன் அள்ளி தூவிட வா..
தோள் இரண்டில் ஏ இளங்கிளி நான்..
நீ தினம் தினம் கூடிட வா..

மொட்டு மொட்டு மலராத மொட்டு..
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு..ஓ..

தமிழ் தரும் சுவையென உன் வாய்மொழி கேட்டேன்..
அது தரும் சுகம் என விழி பார்வையை பார்த்தேன்..
உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்..
உன்னால் பெண்ணை பண் பாட வேண்டும்..
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்..
என்றும் நீயே நானாக வேண்டும்..
உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்..
உன்னால் பெண்ணை பண் பாட வேண்டும்..
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்..
என்றும் நீயே நானாக வேண்டும்..
இலக்கியம் எனதுடலே வா நீ வா..
இலக்கணம் உனதுருவே தா நீ தா தேவா..

ஆணழகா உன் அடிமை இங்கே..
நீ தேன் அள்ளி தூவிட வா..
தோள் இரண்டில் ஏ இளங்கிளி நான்..
நீ தினம் தினம் கூடிட வா..

எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன்..
மலர் உடல் மனம் பெற தினம் தேவனை பார்த்தேன்..
பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்..
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்..
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்..
நித்தம் நித்தம் பித்தான சித்தம்..
பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்..
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்..
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்..
நித்தம் நித்தம் பித்தான சித்தம்..
இளமையின் ரகசியமே வா நீ வா..
இது தினம் அவசியமே தா நீ தா தேவா..

ஆணழகா உன் அடிமை இங்கே..
நீ தேன் அள்ளி தூவிட வா..
தோள் இரண்டில் ஏ இளங்கிளி நான்..
நீ தினம் தினம் கூடிட வா..

மொட்டு மொட்டு மலராத மொட்டு..
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு..
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு..
சிட்டு சிட்டு சிந்தாத சிட்டு..