KAALAMELLAM KADHAL VAAZHGA
காலமெல்லாம் காதல் வாழ்க
Movie: Kadhal kottai
Singers: K.S.Chithra, P.Unni krishnan
Music director: Deva
பெண்: காலமெல்லாம் காதல் வாழ்க..
காதலென்னும் வேதம் வாழ்க..
காதலே நிம்மதி..
கனவுகளே அதன் சன்னிதி..
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி நீ காதலி..
ஆண்: கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்..
பெண்: தூக்கம் கெட்டு போகுமம்மா தூது செல்ல தேடுமம்மா காதல்..
ஆண்: ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும்..
காதல் தினம் தேவை..
பெண்: கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும்..
காதல் அது போதை..
ஆண்: காதலுக்கு பள்ளி இல்லையே..
அது சொல்லி தரும் பாடம் இல்லையே..
பெண்: காலமெல்லாம் காதல் வாழ்க..
பெண்: ஜாதி இல்லை பேதம் இல்லை சீர்வரிசை தானம் இல்லை காதல்..
ஆண்: ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதாம் ஏவாள் தப்புமில்லை காதல்..
பெண்: ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன..
காதல் ஒன்று சேரும்..
ஆண்: நீயின்றி நான் இல்லை நான் இன்றி நீயில்லை..
காதல் மனம் வாழும்..
பெண்: ஜாதகங்கள் பார்ப்பதில்லையே..
அது காசு பணம் கேட்பதில்லையே..
ஆண்: காலமெல்லாம் காதல் வாழ்க..
காதலென்னும் வேதம் வாழ்க..
காதலே நிம்மதி..
கனவுகளே அதன் சன்னிதி..
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி நீ காதலி..
......................
Songs lyrics from Kaadhal kottai movie:-
