NAAN PIZHAI NEE MAZHALAI
நான் பிழை நீ மழலை
Movie: Kaathuvaakula rendu kaadhal
Singers: Ravi, Shasha tirupati
Music director: Anirudh ravichandar
ஆண்: நான் பிழை நீ மழலை..
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை..
நீ இலை நான் பருவ மழை..
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை..
பெண்: ஆழியில் இருந்து அலசி இழுத்தேனே..
அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே..
ஆண்: அடி அழகா சிரிச்ச முகமே..
நான் நெனச்சா தோணும் இடமே..
அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே..
நான் பிறந்த தினமே கெடச்ச வரமே..ஓ..
நான் பிழை நீ மழலை..
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை..
நீ இலை நான் பருவ மழை..
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை..
அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன்..
அவள் நடைமுறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன்..ஓ..
பெண்: அவன் அருகினிலே கனல் மேல் பனித்துளி ஆனேன்..
அவன் அணுகையிலே நீர் தொடும் தாமரை ஆனேன்..
ஆண்: அவளோடிருக்கும் ஒருவித சிநேகிதன் ஆனேன்..
அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்..
பெண்: ஆழியில் இருந்து அலசி இழுத்தேனே..
அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே..
ஆண்: அடி அழகா சிரிச்ச முகமே..
நான் நெனச்சா தோணும் இடமே..
அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே..
நான் பிறந்த தினமே கெடச்ச வரமே..ஓ..
நான் பிழை நீ மழலை..
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை..
நீ இலை நான் பருவ மழை..
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை..
.....................
Songs lyrics from Kaathuvaakula rendu kadhal movie:-
