KANNUKKUL YEDHO

 கண்ணுக்குள் ஏதோ



Movie: Thiruvilaiyadal aarambam

Singer:  Vijay yesudas, Rita

Music director: D.Imman 


ஆண்: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ..
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே..
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ..
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே..
உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது..
என் உலகமே உன்னால் மாறி விட்டது..

பெண்: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா..

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ..
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே..

ஆண்: காதல் வந்து கெடுத்த பின் கவிதைகள் படிக்கிறேன்..

பெண்: தோழிகளை தவிர்க்கிறேன் உன்னை தேடி வருகிறேன்..

ஆண்: தாய் தந்தை இருந்தும் ஏன் தனிமையில் தவிக்கிறேன்..
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்..

பெண்: எந்தன் வீட்டை சொந்தம் என்று நேற்று வரை நினைத்தவள்..
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்..

ஆண்: உன்னை காதலித்த கணமே உனக்குள் வந்தேன்..

பெண்: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ..
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே..

ஆண்: கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்..

பெண்: கனவுகள் இங்கு இல்லை கண் விழித்து நினைக்கிறேன்..

ஆண்: பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி..
மறந்தால் தானே நினைத்திட..

பெண்: அன்பே நானோ இருக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்..
உடனே நானும் பிறந்திட..

ஆண்: உண்மை காதலில் சாதல் இல்லையடி..

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ..
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே..

பெண்: நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ..
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே..

ஆண்: உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது..
என் உலகமே உன்னால் மாறி விட்டது..

பெண்: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா..