VIZHIGALIL VIZHIGALIL

 விழிகளில் விழிகளில் 


Movie: Thiruvilaiyadal aarambam

Singer: Harish ragavendra

Music director: D.Imman 


I just need your love..

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்..
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்..
சின்ன சின்ன  சிரிப்பினில் சிதறடித்தாய்..
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்..
யாரென்று நான் யாரென்று அடி மறந்தே போனதே..
உன் பேரே கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே..
ஒருநாள் வரைதான் என நினைத்தேன்..
பலநாள் தொடரும் வலி கொடுத்தாய்..
காதல் என் காதில் சொல்வாய்..
காதல் என் காதில் சொல்வாய்..

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்..
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்..
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்..
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்..

சாலையில் நீ போகையிலே.. மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்..
காலையில் உன்னை பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவம் இருக்கும்..
யாரடி நீ யாரடி..அதிருதே என் ஆறடி..
ஒரு கார்பன் தாளென கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய்..
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே எங்கே ஓடுகிறாய்..
போகாதே..அடி போகாதே..என் சுடிதார் சொர்க்கமே..
நீ போனாலே..நீ போனாலே..என் வாழ்நாள் சொற்பமே..

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்..
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்..
சின்ன சின்ன  சிரிப்பினில் சிதறடித்தாய்..
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்..

பூவிலே செய்த சிலையல்லவா..
பூமியே உனக்கு விலையல்லவா..
தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே எனக்கு வரமல்லவா..
மேகமாய் அங்கு நீயடி.. தாகமாய் இங்கு நானடி..
உன் பார்வை தூரலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி..
அந்த காதலை நானும் மறுநொடி பார்த்தேன்..மரமாய் அசையுதடி..
இன்றோடு..அடி இன்றோடு என் கவலை முடிந்ததே..
ஒரு பெண் கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே..

எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்..
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்..
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்..
யாரென்று நான் யாரென்று அடி மறந்தே போனதே..
உன் பேரே கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே..
ஒருநாள் வரைதான் என நினைத்தேன்..
பலநாள் தொடரும் வலி கொடுத்தாய்..
காதல் என் காதில் சொல்வாய்..
காதல் என் காதில் சொல்வாய்..