VAARANAM AAYIRAM

 வாரணம் ஆயிரம்

Movie:  Keladi kanmani

Singers: S.Janaki

Music director: Ilayaraja

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான்..
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான்..
என் எதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனா கண்டேன்..
தோழி நான் கனா கண்டேன்..

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்..
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்..
வந்திருந்தென்னை மகட்  பேசி மந்திரித்து..
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்..
வந்திருந்தென்னை மகட்  பேசி மந்திரித்து..
மந்திர கோடி உடுத்தி மணமாலை..
மந்திர கோடி உடுத்தி மணமாலை..
அந்தரி சூட்ட கனா கண்டேன்..
தோழி நான் கனா கண்டேன்..

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்..
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்..
பாசிலை நாணல் படுத்து உட்பரிதி வைத்து..
பாசிலை நாணல் படுத்து உட்பரிதி வைத்து..
காய் சின மாக்களிறு அன்னான் என் கை பற்றி..
நீ வலஞ்செய்ய கனா கண்டேன்..
தோழி நான் கனா கண்டேன்..