THENDRAL DHAN

 தென்றல் தான்



Movie:  Keladi kanmani

Singers: K.J.Yesudas, K.S.Chithra

Music director: Ilayaraja


ஆண்: தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்..
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்..
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட..
ஆசை ஊற்று காதில் கானம் பாட..
நெஞ்சோடு தான் வா வா வா கூட..

பெண்: தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்.. 
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்..

ஆண்: காவேரி ஆற்றின் மீன் இங்கே காதோடு மோதும் ஆனந்தம்..

பெண்: தீராத காதல் தேரிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்..

ஆண்: பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற..

பெண்: தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர..

ஆண்: தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை..

பெண்: தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில் பாய்ந்திடும் என் எண்ணங்கள்..

ஆண்: நித்தம் நீ தித்தித்தாய் பக்கம்தான் வா வா வா கூட..

பெண்: தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்..
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்..
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட..
ஆசை ஊற்று காதில் கானம் பாட..
நெஞ்சோடு தான் வா வா வா கூட..

ஆண்: தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்..
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்..

பெண்: பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது..

ஆண்: பூவாடை மூடும் ஜாலத்தால் பூ பாலம் தானாய் தோன்றாது..

பெண்: நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும்..

ஆண்: தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும்..

பெண்: தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை..

ஆண்: கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில்..

பெண்: நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட..

ஆண்: தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் 

பெண்: உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்..

ஆண்: ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட..

பெண்: ஆசை ஊற்று காதில் கானம் பாட..

ஆண்: நெஞ்சோடு தான் வா வா வா கூட..
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்..