NEE PAADHI NAAN PAADHI

 நீ பாதி நான் பாதி




Movie:  Keladi kanmani

Singers: K.J.Yesudas, Uma ramanan

Music director: Ilayaraja


ஆண்:  நீ பாதி நான் பாதி கண்ணே..

பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..

ஆண்:  நீ பாதி நான் பாதி கண்ணே..

பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..

ஆண்: நீ இல்லையேல் இனி நானில்லையே.. 
உயிர் நீயே..

பெண்:  நீ பாதி நான் பாதி கண்ணா..

ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..

பெண்: வான பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்..

ஆண்: கானப் பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப் பாடல்..

பெண்: மஞ்சள் மணக்கும்..
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே..

ஆண்: மெல்ல சிரிக்கும் 
உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளி தெளிக்கும் முன்னாலே..

பெண்: மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது..

ஆண்:  நீ பாதி நான் பாதி கண்ணே..

பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..
நீ பாதி நான் பாதி கண்ணா..

ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..

ஆண்: இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே..

பெண்:  இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்..
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்..

ஆண்: சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா..

பெண்: இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா..

ஆண்: சுமையானது ஒரு சுகமானது பூவை நீதான்..

பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா..

ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..
நீ இல்லையேல் இனி நானில்லையே.. 
உயிர் நீயே..

பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா..

ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..