THAAYARUM ARIYAMAL
தாயாரும் அறியாமல்
Movie: Thithikudhe
Singer: P.Unni krishnan
Music director: Vidyasagar
தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல் மொட்டொன்று பட்டென்று மலரும்..
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல் பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்..
தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல் மொட்டொன்று பட்டென்று மலரும்..
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல் பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்..
பயம் போக சீராற்றி பாலூற்றி நீராட்டி திருமேனி மருதாணி இடுக..
உளுந்தாலே களி செய்து வெல்லங்கள் தானிட்டு நல்லெண்ணெய் தான் விட்டு தருக..
பொன்னோடு சீர் கொண்டு வருக..
இந்த பூவுக்கு புது சேலை புனைக..
பொன்னோடு சீர் கொண்டு வருக..
இந்த பூவுக்கு புது சேலை புனைக..
இயற்கை தரும் பூப்போடு இன்னுமோரு பூப்பெய்தி வண்ண மகள் குலம் வாழ வாழ்க..
தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல் மொட்டொன்று பட்டென்று மலரும்..
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல் பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்..
....................
Songs lyrics from thithikuthe movie: