MAINAVE MAINAVE
மைனாவே மைனாவே
Movie: Thithikudhe
Singer: Chinmayi, harini
Music director: Vidyasagar
மைனாவே மைனாவே..
உன் கூட்டில் எனக்கொரு வீடு வேண்டும் தாராயோ..
மைனாவே மைனாவே..
என் வீட்டில் உனக்கொரு கூடு தாரேன் வாரோயோ..
விண் தாண்டி போனாலும் என் வாசல் வருவாயா..
என் உடையை நீ வாங்கி உன் சிறகை தருவாயா..
என் மனசை பிசையும் விசையை காதில் வந்து சொல்வாயா..
மைனாவே மைனாவே..
உன் கூட்டில் எனக்கொரு வீடு வேண்டும் தாராயோ..
மைனாவே மைனாவே..
என் வீட்டில் உனக்கொரு கூடு தாரேன் வாரோயோ..
ஆஹாஹா பட்டாம்பூச்சி ஆகாயம் தொட்டது உண்டா..
மழை வந்தால் மேகம் தாண்டி பறந்ததுண்டா..
மலைக்காட்டில் அலையும் கிளியே மழைத்தாரை சிதறும்போது..
ஆகாய குளியல் போட்டு நனைந்ததுண்டா..
பூமி நமக்கு பூக்காடு..
வீசும் காற்றாய் விளையாடு..
ஓடும் ஆற்றின் பின்னால் ஓடிடு..
மைனாவே மைனாவே..
உன் கூட்டில் எனக்கொரு வீடு வேண்டும் தாராயோ..
மைனாவே மைனாவே..
என் வீட்டில் உனக்கொரு கூடு தாரேன் வாரோயோ..
ஒரு நூறு யானை சேர்ந்து ஒன்றன் பின் ஒன்றாய் நின்று..
ஊர்வலமாய் போவது போல ரயில் போகுதே..
ஆனந்த ரயிலில் ஏறி ஆகாய முடிவை தேடி..
தினந்தோறும் பயணம் போக மனம் ஏங்குதே..
விண்ணில் ஏறி விளையாடி..
வெள்ளை நிலவில் இளைப்பாறி..
நாளை வந்து பூமி சேரலாம்..
மைனாவே மைனாவே..
உன் கூட்டில் எனக்கொரு வீடு வேண்டும் தாராயோ..
மைனாவே மைனாவே..
என் வீட்டில் உனக்கொரு கூடு தாரேன் வாரோயோ..
விண் தாண்டி போனாலும் என் வாசல் வருவாயா..
என் உடையை நீ வாங்கி உன் சிறகை தருவாயா..
என் மனசை பிசையும் விசையை காதில் வந்து சொல்வாயா..
....................
Songs lyrics from thithikuthe movie: