ORU NIMIDAMA

 ஒரு நிமிடமா

Movie:  Thithikudhe

Singer: Tippu, Srivarthini

Music director: Vidyasagar 

ஆண்: ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமிடமா தவறிவிட்டேன்..
ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமிடமா தவறிவிட்டேன்..
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்து விட்டேன்..
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்து விட்டேன்..
அன்பே அன்பே  எங்கே..
பள்ளி தோழியே வந்து போனாயா..
பாவாடை பூவே வந்து போனாயா..
பள்ளி தோழியே வந்து போனாயா..
பாவாடை பூவே வந்து போனாயா..
காற்றெல்லாம் உன் வாசம் வந்து போனாயா..
கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா..
நதியெல்லாம் உன் கொலுசு வந்து போனாயா..

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமிடமா தவறிவிட்டேன்..
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்து விட்டேன்..
அன்பே அன்பே அன்பே  அன்பே எங்கே..
பள்ளி தோழியே வந்து போனாயா..
பாவாடை பூவே வந்து போனாயா..

நிலா வந்து போனதற்கு வான்வெளியில் சாட்சி இல்லை..
ஆனாலும் பூமியிலே அல்லி எல்லாம் சாட்சி சொல்லும்..
நீ வந்து போனதற்கு சாட்சி சொல்ல யாருமில்லை..
ஆனாலும் அலையெல்லாம் அசையாமல் சாட்சி சொல்லும்..
இளம்பிறையாக பார்த்தவளே இப்போதெப்படி இருப்பாயோ..
அங்கம் குளித்து திமிறும் அழகில் அடையாளங்கள் தொலைத்தாயோ..
இளம்பிறையாக பார்த்தவளே இப்போதெப்படி இருப்பாயோ..
அங்கம் குளித்து திமிறும் அழகில் அடையாளங்கள் தொலைத்தாயோ..
உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும் உறைந்து விடாமல் இருப்பாயோ..
அன்பே அன்பே அன்பே  அன்பே எங்கே..
பள்ளி தோழியே வந்து போனாயா..
பாவாடை பூவே வந்து போனாயா..

பெண்: பூ போல மலர்ந்து விட்டேன் வாழ்வில் ஏதும் வாசம் இல்லை..
கண்ணா உன்னை கண்டு கொண்டால் கண்கள் மீண்டும் தேவையில்லை..

ஆண்: மறுமுறை என்னை பார்க்கையிலே மார்பில் புதைந்து அழுவாயோ..
வெட்கம் தடவிய புன்னகையாலே விவகாரங்கள் செய்வாயோ..
மறுமுறை என்னை பார்க்கையிலே மார்பில் புதைந்து அழுவாயோ..
வெட்கம் தடவிய புன்னகையாலே விவகாரங்கள் செய்வாயோ..
இலையில் சிக்கிய மழையை போலே என்னை தொடாமல் தவிப்பாயோ..