MAINAVE MAINAVE DUET

 மைனாவே மைனாவே

Movie:  Thithikudhe

Singer: Unni krishnan, Sadhana sargham

Music director: Vidyasagar 

ஆண்: மைனாவே மைனாவே..
என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா..
ஏ மைனாவே மைனாவே..
என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா..
விண்மீனாய் தொலைந்த மகள் வெண்ணிலவாய் வந்தாளா..
தேடியவன் கைகள் மேலே தேவதையாய் விழுந்தாளா..
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா..

மைனாவே மைனாவே..
என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா..
மைனாவே மைனாவே..
என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா..

ஆண்: நீ போன காலம் தொட்டு என் வாழ்வில் பகலே  இல்லை..
இருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன்..

பெண்: திசைக்கொன்றாய் தேடி செல்ல விழி நான்கு இல்லை என்று..
கண்ணீரை சிந்தி சிந்தி கரைந்துவிட்டேன்..

ஆண்: பிரிந்தோம் அன்று துளியாக..
இணைந்தோம்  இன்று நதியாக..

பெண்:  நீரின் தாகம் நீரால் தீர்ந்தது..

ஆண்: ஆ..மைனாவே மைனாவே..
என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா..

பெண்: மைனாவே மைனாவே..
என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா..

பெண்: சில் என்ற முத்தம் ஒன்றில் செல் எல்லாம் நனையும் போது..
உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே..

ஆண்: தேரோடு பூவனம்  ஒன்று மாரோடு சரியும் போது..
அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே..

பெண்: தேகம் ரெண்டும் திரியாக..
ஜீவன் எரியும் சுடராக..

ஆண்: மைனாவே மைனாவே..
என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா..

பெண்: மைனாவே மைனாவே..
என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா..

ஆண்: விண்மீனாய் தொலைந்த மகள் வெண்ணிலவாய் வந்தாளா..
தேடியவன் கைகள் மேலே தேவதையாய் விழுந்தாளா..
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா..