IRAQ YUTHAM
ஈராக்கு யுத்தம்
Movie: Thithikudhe
Singer: Udit narayan, Anuradha sriram
Music director: Vidyasagar
ஆண்: மொருஹபா..
பெண்:ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க..
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க..
ஆண்:ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க..
பெண்: அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க..
ஆண்: ஹே எண்ணைய் வயல் எரிஞ்சு போச்சு எங்க..
பெண்: என் எண்ணை வயல் எரியுதடா இங்க..
ஆண்: கண்ணி வெடி அணஞ்சு போச்சு எங்க..
பெண்: என் கன்னி வெடி வெடிக்குதடா இங்க..
பெண்:ஈராக்கு யுத்தம்..
ஆண்:ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க..
பெண்: அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க..
ஆண்: மருஹபா..மருஹபா..
ஆண்: ஹே ஏவி விட்ட ஏவுகணை போதும் போதும் போதுமென ஏதேதோ எரிஞ்சு போச்சு அங்க..
பெண்: எங்கும் ஏவாத ஏவுகணை வேணும் வேணும் வேணுமென என் மார்பு துடிக்குது இங்க..
ஆண்: வட்டமிட்டு வட்டமிட்டு வல்லரசு குண்டு போட்டு கட்டடங்கள் உடஞ்சு போச்சு அங்க..
பெண்: நீ திட்டமிட்டு திட்டமிட்டு என் மனச துண்டு போட கட்டழகு கழண்டு போச்சு இங்க..
ஆண்: ஊருக்குள்ள சேதம் வருமே அந்த யுத்தம் யுத்தம் யுத்தம் நிறுத்து ஓய்..
பெண்: என்னை கொஞ்சம் சேதப்படுத்து நீ நித்தம் நித்தம் யுத்தம் நடத்து..
ஆண்: ஹே எண்ணைய் வயல் எரிஞ்சு போச்சு எங்க..
பெண்: என் எண்ணை வயல் எரியுதடா இங்க..
ஆண்: கண்ணி வெடி அணஞ்சு போச்சு எங்க..
பெண்: என் கன்னி வெடி வெடிக்குதடா இங்க..
பெண்:ஈராக்கு யுத்தம்..
ஆண்: முடிஞ்சு போச்சு எங்க..
பெண்: அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க..
ஆண்: பீரங்கி யும் துப்பாக்கியும் பெருமூச்சு விட்டு விட்டு பாலைவனம் கருகி போச்சு எங்க..
பெண்: பேரழகா உன்ன எண்ணி பெருமூச்சு விட்டு விட்டு சேலைவனம் கருத்து போச்சு இங்க..
ஆண்: வான்வழி தரைவழி ரெண்டு பக்கம் தாக்கப்பட்டு பாக்தாத் விழுந்துருச்சு அங்க..
பெண்: கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள ரெண்டு பக்கம் தாக்க பட்டு கண்ணு முழி பிதுங்கிருச்சு இங்க..
ஆண்: அன்னம் தண்ணி ஏதும் இல்லாம அங்கே ஆர்ப்பாட்டம் நடக்கிறதே..
பெண்: அன்னம் தண்ணி ஏதும் செல்லாம என் ஆவி இங்க துடிக்கிறதே..
ஆண்: ஹே எண்ணைய் வயல் எரிஞ்சு போச்சு எங்க..
பெண்: என் எண்ணை வயல் எரியுதடா இங்க..
ஆண்: கண்ணி வெடி அணஞ்சு போச்சு எங்க..
பெண்: என் கன்னி வெடி வெடிக்குதடா இங்க..
ஆண்:ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க..
பெண்: அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க..
ஆண்:ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க..
பெண்: அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க..
ஆண்: ஹே எண்ணைய் வயல் எரிஞ்சு போச்சு எங்க..
பெண்: என் எண்ணை வயல் எரியுதடா இங்க..
ஆண்: கண்ணி வெடி அணஞ்சு போச்சு எங்க..
பெண்: என் கன்னி வெடி வெடிக்குதடா இங்க..
பெண்:ஈராக்கு யுத்தம்..
....................
Songs lyrics from thithikuthe movie: