PALLANKUZHIYIN VATTAM PAARTHEN
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
Movie: Anandham
Singers: P.Unni krishnan, Harini
Music director: S.A.Rajkumar
பெண்: பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்..
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்..
செவ்வந்தி பூவின் நடுவில் பார்த்தேன்..
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்..
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம்..
சரிசமகரிக சரிசமகரிக சரிசமகரிகமப பசசநிதநி பதபம கமககமநிபக ரிகச..
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
ஆண்: அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்..
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்..
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும் எந்தன் அன்பு சேர்ந்திருக்கும்..
நெஞ்சில் வைத்து காத்திரு..
பெண்: தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை..
இந்த நாணயம் போதாதா..
தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா..
ஆண்: செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே..
பல சில்லறை சிதறிவிடும்..
செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்..
பெண்: பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
ஆண்: புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
பெண்: அட நேற்று நடந்தது நாடகமா..
நீ காசு கொடுத்தது சூசகமா..
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு என்ன சொல்ல காசு தந்தாய்..
எண்ணி எண்ணி பார்க்கிறேன்..
ஆண்: அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே இந்த நாணயமோ சாட்சி..
இருக்கும் உயிரும் உனக்கே உபயம் எதற்கு ஆராய்ச்சி..
பெண்: இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விடமாட்டேன்..
கடவுள் வந்தே கேட்டால் கூட காணிக்கையிட மாட்டேன்..
ஆண்: பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
பெண்: துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்..
ஆண்: கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்..
பெண்: செவ்வந்தி பூவின் நடுவில் பார்த்தேன்..
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்..
ஆண்: இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்
பெண்: ஒற்றை நாணயம்..
சரிசமகரிக சரிசமகரிக சரிசமகரிகமப பசசநிதநி பதபம கமககமநிபக ரிகச..
சரிசமகரிக சரிசமகரிக சரிசமகரிகமப பசசநிதநி பதபம கமககமநிபக ரிகச..
......................
Songs lyrics from Anandham movie:
