KALYANA VAANIL
கல்யாண வானில்
Movie: Anandham
Singers: Unni menon, Sujatha
Music director: S.A.Rajkumar
ஹே ஜொலிக்க ஜொலிக்க ஒரு ஜோடி புறா வந்திருச்சு
சரிசதபதசரி..சரிசதபதசரி..
சாமந்தி வாசத்தில் ரெண்டும் சந்தனத்தை பூசிகிச்சு..
சரிசதபதசரி..சரிசதபதசரி..
ஆண்: கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்..
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்..
கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்..
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்..
அழியாதது காதல் கோலம்..
ஓயாமலே கேட்கும் காதில் மேள நாயனம்..
நீயோ ஏற்றும் தீபத்தில் கார்த்திகை நாளும் வீட்டுக்குள் வர வேண்டும்..
எந்தன் தோட்டத்து பூவுக்கும் பூக்கும் ஆசை உன்னால் எழ வேண்டும்..
பெண்: கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்..
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்..
பெண்: தண்ணீர் குடத்தில் ஞாபகம் நிரப்பி வாசல் எங்கும் தெளிப்பேனே..
ஆண்: நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே யாரோ போல ரசிப்பேனே..
பெண்: ஜீவனது ஏங்கும்
ஆண்: ஏங்கும்
பெண்: அடி மனசு பொங்கும்..
ஆண்: நெஞ்சுக்குழி எங்கும்
பெண்: எங்கும்
ஆண்: உன் நினைவு தங்கும்..
பெண்: நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன்..
ஆண்: கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்..
பெண்: கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்..
பெண்: மனைவியான நிமிஷத்திலிருந்து உன்னை பேர் சொல்லி அழைப்பேனே..
ஆண்: தூங்கும் போதும் உன் பெயர் கேட்டால் துள்ளி எழுந்து பார்ப்பேனே..
பெண்: குளியலறை பக்கம்
ஆண்: பக்கம்
பெண்: தலை து வட்ட வருவேன்..
ஆண்: படுக்கையினில் மிச்சம்
பெண்: மிச்சம்
ஆண்: வைத்தது அங்கே தருவேன்..
பெண்: வளையோசையால் சைகை காட்டுவேன்..
ஆண்: தயங்காமலே தேவை யாவும் கேட்பேன்..
பெண்: கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்..
ஆண்: கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்..
பெண்: அழியாதது காதல் கோலம்..
ஆண்: ஓயாமலே கேட்கும் காதில் மேள நாயனம்..
......................
Songs lyrics from Anandham movie:
