AASAI AASAIYAI IRUKIRADHE

ஆசை ஆசையாய்

Movie: Anandham

Singers: K.J.Yesudas

Music director: S.A.Rajkumar

சரிபமகரி சரிசநிச..
சரிபமகரி சரிசநிச..
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே..
பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே..
நம்மை காணுகிற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும்..
சேர்ந்து வாழுகிற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்..
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்..
உயிர் எங்கள் வீடாகும்..
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்..

சரிபமகரி சரிசநிச..
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே..
பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே..

ஓ நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்..
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்..
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி கோவிலைப் போல மாற்றிடுவோம்..
அன்னைக்கு பணிவிடை செய்திடவே ஜென்மங்கள் வாங்கி வந்தோம்..
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும் சொந்தங்கள் சேர்ந்திருப்போம்..
அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே.. 

சரிபமகரி சரிசநிச..
சரிபமகரி சரிசநிச..
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே..
பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே..

ஓ பல நூறு வண்ணம் ஒன்றாக சேரும் ஓவியம் போல சேர்ந்திருப்போம்..
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை சொல்வதைப் போல வாழ்ந்திருப்போம்..
எங்களுக்குள்ளே வளைந்திடுவோம் நாணலை போல் தானே..
நம் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல் நாமே..
அடை மழையாக பெய்யும் சந்தோஷம்..

சரிபமகரி சரிசநிச..
சரிபமகரி சரிசநிச..
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே..
பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே..
நம்மை காணுகிற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும்..
சேர்ந்து வாழுகிற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்..
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்..
உயிர் எங்கள் வீடாகும்..
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்..
சரிபமகரி சரிசநிச..
சரிபமகரி சரிசநிச..
சரிபமகரி சரிசநிச..
சரிபமகரி சரிசநிச..

......................

Songs lyrics from Anandham movie: