GOKULATHU RAADHAI
கோகுலத்து ராதை
Movie: Anandham
Singers: Unni menon, Sujatha, S.P.Charan, Yugendran
Music director: S.A.Rajkumar
பெண்: சூடி தந்த சுடர் கொடியே சுபவேளை நீ வருக..
தேடி கொண்ட திரவியமே தேன் மாலை போல வருக..
மின்னும் அம்பு விழி சந்திர பிம்பம் பொன் ஒளி வீச
மங்கை மைதிலி உன் செம்மலர் பாத தண்டைகள் ஆட
சங்கம் சூழ வருக..
ஸ்ரீரங்கன் தாளை அடைய..
வளர் திங்களாகி வருக..
ஆண்: கோகுலத்து ராதை வந்தாளோ இந்த கல்யாண தேரிலே..
பெண்: கல்யாண தேரிலே..
ஆண்: மிதிலை நகர் சீதை வந்தாளோ எங்கள் வீட்டோடு வாழவே..
வீட்டோடு வாழவே..
அந்த தென்மதுரை மீனாள் விளக்கேற்ற வந்தாள்..
சீதனமாய் கையில் தாய் பாசம் கொண்டு வந்தாள்..
கோகுலத்து ராதை வந்தாளோ இந்த கல்யாண தேரிலே..
மிதிலை நகர் சீதை வந்தாளோ எங்கள் வீட்டோடு வாழவே..
பெண்: பொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க
பெருசா வீடு ஒன்னு கட்டுங்க..
ஆண்: தங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க இன்னும் பத்து மடங்கு கொட்டுங்க..
பெண்: உங்கள் மாப்பிள்ளையின் நெஞ்சை அம்மானை ஆடி
சேலையிலே முடிஞ்சி ஜெயிப்பாளே எங்க பொண்ணு..
ஆண்: மூணு முழம் மல்லிகை பூவும் கொஞ்சம் அல்வாவும் போதுமே..
எந்த பொண்ணும் ஆம்பள நெஞ்சில் அடி தலை சாஞ்சு மயங்குமே..
பெண்: தஞ்சாவூர் பொம்ம போல தான் உங்க மாப்பிள்ளை தான் தலையாட்டுவான்..
ஆமா தலையாட்டுவான்
ஆண்: தேசிங்கு ராஜன் எங்கண்ணன் ஓய் உங்க குதிரை வாலாட்டுமா..
ஆமா வாலாட்டுமா..
பெண்: ஏ தப்பாம எங்க பொண்ணு செய்வாளே தந்திரம்..
சிங்கத்தை கட்டி போடும் தலைக்காணி மந்திரம்..
ஆண்: போட்டி எல்லாம் போட்டு பாத்தோம்டி அது நமக்குள்ள தானடி..
ஜோடிய தான் நல்லா பாருடி மதுர மீனாட்சி சொக்கன்டி..
வெள்ளி பனி முற்றத்தில் வெட்கம் எனும் தோட்டத்தில்..
மல்லிகை பூத்ததோ புது மல்லிகை பூத்ததோ..
மாடக்குயில் சத்தத்தில் மஞ்சள் முக நாணத்தில்..
மங்களம் வந்ததோ தினம் மங்களம் வந்ததோ..
இனி எங்கள் நெஞ்ச கூடத்தில் தீப திருவிழா..
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே சின்ன வெண்ணிலா..
எங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு தென்றல் சந்தனம் பூசுதோ..
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய் ஒரு தேவதை வந்ததோ.. ஓ..ஓ...ஓ..ஓ..
......................
Songs lyrics from Anandham movie:
