AAVI PARAKUM TEA KADAI

 ஆவி பறக்கும் டீக்கடை



Movie: Rajini murugan

Singers: V.M.Mahalingam, Padava  gopi

Music director: D.Imman


ஆவி‌.. ஆ ஆ ஆவி..
ஆவி பறக்கும் டீக்கட..
அவ வந்ததனால பூக்கட..
தேவி தினுசா பாத்திட..
நான் மறந்தே போனேன் சாப்பிட..
காதல் என்னும் டீயில நெஞ்ச பன்னா நனைச்சிட்டா
தேடி வந்த தேவதை என்ன நேக்கா குடிச்சிட்டா..
நேத்து வரைக்கும் நானும் தான்..
ஆகாம இருந்தேன் போனியா..
அவ பாத்து சிரிச்ச பிறகுதான்..
ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா..

ஆவி‌.. ஆ ஆ ஆவி..
ஆவி பறக்கும் டீக்கட..
அவ வந்ததுனால பூக்கட..
தேவி தினுசா பாத்திட..
நான் மறந்தே போனேன் சாப்பிட..

காதல் என்பது டபரா செட்டு..
காலந்தோறுமே பிரியாது..
ஆசை என்பது பலகார தட்டு..
மூடி வைக்கவும் முடியாது..
சூட ஏத்தும் பாய்லரா அவளது மேனியும் தோணுதே..
சுக்கு மல்லி காபியா அவளது வாசனை வீசுதே..
அவ பேச்சு செம டேஸ்ட்டு நெனச்சாலே அது பூஸ்ட்டு..
கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு..

ஆவி பறக்கும் டீக்கட..
அவ வந்ததுனால பூக்கட..
தேவி தினுசா பாத்திட..
நான் மறந்தே போனேன் சாப்பிட..

கன்னி தீவு  போல் தொடரும் லவ்வ டெய்லி பேப்பரா படிச்சேனே..
உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன 
தொட்டு திங்கவே உடைஞ்சேனே..
ஜாடை காட்டும் கண்ணுதான் பழகிட டோக்கனும் வாங்குதே..
மூட மாத்தும் சொல்லுதான் மனசையும் பார்சலு போடுதே..
அவ தொட்டு தரும் கிளாசு..
அதிலேதான் உயிர் க்ளோசு..
பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு..

ஆவி பறக்கும் டீக்கட..
அவ வந்ததுனால பூக்கட..
தேவி தினுசா பாத்திட..
நான் மறந்தே போனேன் சாப்பிட..
காதல் என்னும் டீயில நெஞ்ச பன்னா நனைச்சிட்டா
தேடி வந்த தேவதை என்ன நேக்கா குடிச்சிட்டா..
நேத்து வரைக்கும் நானும் தான்..
ஆகாம இருந்தேன் போனியா..
அவ பாத்து சிரிச்ச பிறகுதான்..
ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா..
ஆவி....