VALLAVA ENNAI VELLAVA

 வல்லவா என்னை வெல்லவா 




Movie: Vallavan

Singers: sunidhi chauhan  

Music director: Yuvan Shankar raja 


வல்லவா எனை வெல்லவா.. 
கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா..
வல்லவா எனை வெல்லவா..
உனை கண்டதே வரம் அல்லவா..
பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே..
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே..
சந்தோஷத்தில் தள்ளாடுறேன்..
கற்பனைகளில் திண்டாடுறேன்..
காதலை நானும் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன்..

வல்லவா எனை வெல்லவா.. 
கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா..
வல்லவா எனை வெல்லவா..
உனை கண்டதே வரம் அல்லவா..

என் நெற்றி மீது உன் வேர்வை சிந்தி ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்..
உன் மூச்சுக்காற்று வெப்பத்தை சேர்த்து மூழ்கும் முன்னே என்னை மீட்டுவிடும்..
வெளி தோற்றம் தரும் காதல் யாவும்..
சிலநாளே வரும் மாயம் ஆகும்..
அடி நெஞ்சில் சென்று குடியேறும் குணம் தானே பல யுகம் வாழும்..
நீயாய் என்னை இழுப்பதை அணைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்..
வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடித்தேன்..

வல்லவா..வல்லவா..

ஏமாந்து போனேன் ஏமாந்து போனேன் தென்றல் என்றே உன்னை எண்ணிவிட்டேன்..
நீ என்னை சூழ்ந்து ஆட்கொண்டபோது புயல் என்று உன்னை கண்டுகொண்டேன்..
என்னோடு நீ இருக்கும்போது..
பொருளில்லா பல சண்டை தோன்றும்..
எனதறையில் உள்ள சுவர் நான்கும் விதவிதமாய் உன் படம் தாங்கும்..
காலம் பல கடந்தது கடந்தது உறவிது உறவிது கண்ணா..
யாரும் இதை பிரித்திட நினைத்திட உடல் மட்டும் உலவிடும் தன்னால்.. 

வல்லவா எனை வெல்லவா.. 
கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா..
வல்லவா எனை வெல்லவா..
உனை கண்டதே வரம் அல்லவா..
பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே..
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே..ஏஏ..ஏஏ..ஏ..
சந்தோஷத்தில் தள்ளாடுறேன்..
கற்பனைகளில் திண்டாடுறேன்..
காதலை நானும் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன்..

வல்லவா  வெல்லவா கொல்லவா  அள்ளவா..
வல்லவா எனை வெல்லவா..
உனை கண்டதே வரம் அல்லவா..